search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில ஆடை வடிவமைப்பு போட்டி"

    • பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர் சிபினுக்கு வழங்கினார்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு கைத்தறி துறை சார்பில் மாநில அளவில் மாணவர்களுக்கான (பேஷன் டிசைன் படிக்கும்) இளம் ஆடை வடிவமைப்பாளர் போட்டி நடைபெற்றது. இதில் பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு ஆசர் மில் லேபர் காலனியை சேர்ந்த தம்பதியர் விஜயன், சிந்து ஆகியோரின் மகன் சிபின் கலந்துகொண்டு மாநில அளவில் 2வது பரிசு பெற்றார். இதற்கான பரிசுத்தொகை ரூ.75 ஆயிரம் மற்றும் சான்றிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலக த்தில் மாணவர் சிபினுக்கு வழங்கினார். இதையடுத்து சிபின் தனது பெற்றோருடன் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நிர்வாகி திலக்ராஜ், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், 22வது வட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×