search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாலம் திட்டம்"

    • மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் கள்ளிக்குடியில் நடந்தது.
    • இந்த முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கள்ளிக்குடியில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் கள்ளிக்குடியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    கடந்த 2ஆண்டுகளில் தி.மு.க. மக்களுக்காக எந்த திட்டங்களிலும் கவனம் செலுத்தவில்லை. தற்போது 90 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் 2கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று கூறினீர்களே? அதை செய்யவில்லை.

    திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.வ. வேலு பச்சை பொய் கூறியுள்ளார். திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க தி.மு.க. மாவட்ட செயலாளர் கோரிக்கை வித்துள்ளார். அந்த பணிகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

    இந்த ெரயில்வே மேம்பாலம் பணிக்காக ஜெயலலிதா 110விதியின் கீழ் திட்டத்தை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து ெரயில்வே துறையிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்த பின்பு, எடப்பாடி பழனிசாமி 5.2.2021 அன்று அரசாணை எண் 24-யை வெளியிட்டு, ரூ. 17கோடியே 10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, 2 ஆண்டுகளாக இந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

    தற்போது மாவட்ட செயலாளர் தான் கேட்டார் என்று முழு பூசணிக்காயை சோற்றில் அமைச்சர் மறைக்கிறார். மக்கள் இதை நம்ப தயாராக இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×