என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சென்னை மாநகராட்சி பள்ளிகள்"
- இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உடற்கல்வியை மேம்படுத்தும் வகையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்டமாக இன்று கராத்தே, ஜூடோ, குத்து சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தொடங்கப்பட்டன.
பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ந்து எடுத்து வாரத்தில் 2 நாட்கள் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் இவர்களை பங்கெடுக்க செய்து, வெற்றி பெற வைப்பதுதான் இலக்காகும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.
பெரம்பூர், ராயபுரம், தண்டையார் பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவொற்றியூர் தொகுதியில் தலா ஒரு பள்ளி வீதம் கராத்தே பயிற்சி கொடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு தற்போது தரமாக உள்ளது.
- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் வாரியாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
சென்னை:
சென்னையில் ஏற்கெனவே 281 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் 139 பள்ளிகள் புதிதாக இணைக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் தற்போது 420 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளில் தற்போது 1.35 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கல்வித்துறை அதிகாரிகள் கடுமையாக பணியாற்றி வருகிறார்கள்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு தற்போது தரமாக உள்ளது. 2 லட்சம் மாணவர்கள் படிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் உள்ளன.
ஸ்மார்ட்சிட்டி திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டம் ஆகியவற்றின் மூலமாக பல பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் வாரியாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வின்போது 85 சதவீதத்துக்கு மேல் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளது. மாணவர்கள் நன்றாக படிப்பதற்காக சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் வசதிகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி பள்ளிகளின் நுழைவு வாயில்களில் விளம்பர பலகை வைக்குமாறு கூறியுள்ளோம்.
முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்கள் மூலமாகவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் 1.70 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு வைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்