என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோலி சோடா"
- விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
- கோலி சோடா ரைசிங் படத்தின் டீசர் இன்று வெளியாகியது.
இயக்குனர் விஜய் மில்டன் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதைத்தொடர்ந்து தற்பொழுது விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடர் 2014 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா மற்றும் 2018 ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா 2 படங்களின் தொடர்ச்சியாகவே அமைந்து இருக்கிறது.
படத்தின் டீசர் இன்று வெளியாகியது. இத்தொடர் விரைவில் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. மிகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. தொடரில் சேரன், புகழ், அம்மு அபிராமி, ஜான் விஜய், அவந்திகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இவர்க்ளுடன் படத்தின் நாயகனான கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி மற்றும் முருகேஷ் நடித்துள்ளனர்.
இத்தொடர் கோலி சோடா 1 படத்தின் அடுத்ததாகவும் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு முன் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது.
- வேலூரை சேர்ந்த கண்ணுசாமி முதலியார் கோலிசோடா தயாரித்து முதன் முதலில் விற்பனை செய்ய விரும்பினார்.
வேலூர்:
தமிழ்நாட்டில் 1980-களில் குளிர்பானம் என்றதும்நினைவுக்கு வருவது கோலி சோடாதான். வீட்டுக்கு விருந்தினர் வந்ததும்பெட்டிக் கடை அல்லது பலசரக்கு கடைக்கு சென்று கோலி சோடா வாங்கித் தருவார்கள்.
அதன் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் பிரபலமானது. குளிர்பானங்கள் எத்தனை வந்தாலும் கோலி சோடா மவுசு குறையவில்லை.
தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது.
வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க அந்த காலத்திலேயே பலவிதமான குளிர்பானங்களை பருகத் தொடங்கினர்.
வேலூரை சேர்ந்த கண்ணுசாமி முதலியார் கோலிசோடா தயாரித்து முதன் முதலில் விற்பனை செய்ய விரும்பினார்.
இதற்காக ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில் இறக்குமதி செய்தார். 1924-ம் ஆண்டு முதன் முதலில் கோலி சோடாவை அவர் தயாரித்தார்.
வேலூர் மாவட்டத்தில் சிறிய பெட்டி கடைகளுக்கு கோலி சோடா சப்ளை செய்யப்பட்டது.
அந்த காலத்தில் சென்னை பெங்களூர் சாலையில் பயணம் செய்தவர்கள் வழியில் உள்ள கிராமங்களில் கோலி சோடா குடித்திருப்பதை மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கோலி சோடா வேலூரில் பிரபலமாக இருந்தது.
முதன் முதலில் தயார் செய்யப்பட்ட கோலி சோடா பாட்டில் இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பனியில் அவரது தலைமுறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டுள்ளது.
தற்போது பழம் புளூபெர்ரி கோலா எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பச்சை என பலவிதமான கோலி சோடாக்களை தயார் செய்து வருகின்றனர்.இங்கிருந்து வட மாவட்டங்கள் முழுவதும் இவர்கள் கோலிலசோடா விற்பனையை விரிவுபடுத்தி உள்ளனர்.
கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட கோலி சோடா 100-வது ஆண்டை எட்டி வருகிறது.
இதுகுறித்து சோடா கம்பெனி உரிமையாளர்கள் கூறுகையில்:-
கண்ணுசாமி முதலியார் சோடா கம்பனி தொடங்கிய போது உள்ளூரில் விற்பனை அதிகரித்தது. சுதந்திரத்திற்கு பிறகு கோலி சோடா விற்பனை மேலும் அதிகரித்தது .அந்த காலத்தில் ஜெர்மனியில் இருந்து பாட்டில்களை இறக்குமதி செய்தோம்.
தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பாட்டில்கள் கொண்டு வந்து சோடா தயாரித்து வருகிறோம். 1990-ம் ஆண்டு முற்பகுதி வரை சோடா விற்பனை அதிகமாக இருந்தது. அதற்கு பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் வந்ததால் ஓரளவு விற்பனை குறைந்தது.
2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உள்ளூர் குளிர்பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என பொதுமக்களிடையே ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டது. அதன் காரணமாக 2017-ம் ஆண்டுக்கு பிறகு கோலி சோடா விற்பனை புதிய உத்வேகத்தை ஏற்படுத்திவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குளிர்பான விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் கோலி சோடாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்தது.
- கோடை காலத்தை முன்னிட்டு கோலி சோடா தயாரிப்போர் ரோஜா, ஆரஞ்சு, எலுமிச்சை என பல்வேறு சுவைகளில் கோலி சோடாவை அறிமுகம் செய்துள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், சூரிய பகவானின் உக்கிரம் இன்னும் தணியவில்லை.
இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் மக்கள் அதிகாலையிலேயே வியர்வையில் குளித்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, பதனீர் போன்றவற்றை வாங்கி அருந்தும்படி கூறியுள்ளனர்.
டாக்டர்களின் அறிவுரைப்படி இயற்கை பானங்களை தேடி செல்லும் மக்களின் பார்வை தற்போது கோலி சோடா பக்கமும் திரும்பி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமான கோலி சோடா, ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழுத்துபாணி கண்ணாடி பாட்டில்களில் விற்பனைக்கு வந்தது.
சாதாரண பெட்டிக்கடைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த கோலி சோடாக்களின் விலை சாமானிய மக்களும் வாங்கும் அளவுக்கு இருந்ததால் இதனை அதிகமானோர் விரும்பி வாங்க தொடங்கினர். குறிப்பாக வெயிலில் அலைந்து திரும்புவோர், கோலி சோடா ஒன்றை வாங்கி அருந்தி மகிழ்ந்தனர்.
குளிர்பான விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் கோலி சோடாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்தது. அதன்பின்பு சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற கோஷம் கிளம்பியபோது, கோலி சோடாவுக்கும் ஆதரவாக குரல் எழும்பியது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் கோலி சோடாவின் வரவு மீண்டும் தொடங்கியது.
தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்களின் பார்வை மீண்டும் கோலி சோடா பக்கம் திரும்பி உள்ளது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் கோலி சோடாவுக்கு மக்கள் மத்தியில் மீண்டும் மவுசு அதிகரித்து உள்ளது.
கோடை காலத்தை முன்னிட்டு கோலி சோடா தயாரிப்போர் ரோஜா, ஆரஞ்சு, எலுமிச்சை என பல்வேறு சுவைகளில் கோலி சோடாவை அறிமுகம் செய்துள்ளனர். இவை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.150 வரை விற்பனை ஆகிறது. இளம் தலைமுறையினரும் இப்போது கோலி சோடா பக்கம் பார்வையை திருப்பி உள்ளதால் சென்னையில் கோலி சோடா விற்பனை சூடு பிடித்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்