search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரன்"

    • ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
    • ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார்.

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் முதலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க ஷங்கர் அணுகியதாகவும் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகியதால் ரஜினிக்கு கைமாறியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனை கமல்ஹாசனே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, ''எந்திரன் படத்தை எடுக்க நானும் ஷங்கரும் 1990-களில் முயற்சி செய்தோம். இந்த படத்துக்காக எனக்கு மேக்கப் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது.

    ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பளம் போன்ற சில பிரச்சினைகள் காரணமாக அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக அந்த படத்தை எடுப்பது பாதுகாப்பு அல்ல என்று தோன்றியது. அதனால் நான் நடிக்கவில்லை.

    ஆனால் ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார். அது பெரிய வெற்றி பெற்றது'' என்றார்.

    அதன் பின் எந்திரன் 2.0 படத்தில் முதலில் கமல்ஹாசன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியது எனவும், அப்போது கமல் மற்ற படங்களில் கமிட் ஆயிருந்ததால் அவரால் நடிக்க இயலவில்லை. என்று சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அடுத்து வரும் எண் அமையும்
    • "24157817, இது பிபனாச்சி நம்பரா?" என ஒரு நிபுணர் சிட்டியிடம் கேட்பார்

    கணித அறிவியலில் "சீக்வென்ஸ்" (sequence) எனப்படும் வரிசைக்கிரமம் முக்கிய இடம் வகிக்கிறது.

    இதில் "பிபனாச்சி வரிசை" (Fibonacci sequence) எனப்படும் வரிசைக்கிரமம் மிகவும் பிரபலமானது.

    இந்த எண் தொடரில், முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அடுத்து வரும் எண் அமையும்.

    எடுத்துக் காட்டாக 1,1,2,3,5,8,13,21,34,55... என இது தொடர்கிறது.

    இத்தாலி நாட்டை சேர்ந்த "பிபனாச்சி" எனும் கணித வல்லுனர் உருவாக்கியதாக கூறப்பட்டு அவர் பெயரால் அழைக்கப்பட்டாலும், பிபனாச்சி வரிசைக்கிரமம், கி.மு. 200ல் இந்திய கணித வித்வான் "பிங்கள ஆசார்யா" என்பவரால் சம்ஸ்கிருத கவிதைகளில் சொற்றொடர் கையாளுதல் குறித்து பதிவு செய்யப்பட்டதாகவும் வரலாறு உண்டு.

    2010 அக்டோபர் மாதம் உலகெங்கும் பல மொழிகளில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம், எந்திரன் (Enthiran).

    அறிவியல், ஆன்மிகம், கணினிகள், க்ரைம் ஆகியவற்றில் எண்ணற்ற புத்தகங்களை எழுதிய சுஜாதா, இப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.


    எந்திரன் படத்தில் வசீகரன் எனும் விஞ்ஞானி வேடத்தில் வரும் ரஜினிகாந்த், "சிட்டி" எனும் ரோபோவாக மற்றொரு வேடத்தில் நடித்திருந்தார்.

    இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், வசீகரன், தான் உருவாக்கிய ரோபோவை வல்லுனர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார். அப்போது அதில் பல துறையை சேர்ந்த நிபுணர்கள் அதன் திறனை பரிசோதிக்க பல கேள்விகளை கேட்பார்கள்.

    ஒரு நிபுணர், "சிம்பிளா கேட்கிறேன். 24157817, இது பிபனாச்சி நம்பரா?" என சிட்டியிடம் கேட்பார்.

    அதற்கு சிட்டி, "ஆமா, 22-வது பிபனாச்சி நம்பர். பை தி வே, அது மந்தைவெளி சுப்ரமணியத்துடைய போன் நம்பர்" என நகைச்சுவையாக பதிலளிக்கும்.

    இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேல் கடந்த நிலையில், "சிட்டி அளித்திருக்கும் பதில் தவறு. 37-வது பிபனாச்சி எண்தான் 24157817. 22-வது எண் 17711" என சுட்டி காட்டி ஒரு பயனர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.


    எழுத்தாளர் சுஜாதா, இயக்குனர் ஷங்கர் மற்றும் உதவி இயக்குனர்கள் உட்பட அனைவரும் எவ்வாறு இதனை கவனிக்க தவறினர் என கேட்டும், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த தவறை கண்டுபிடித்து வெளி உலகிற்கு கூறிய பயனரை பாராட்டியும், சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர்.

    • எந்திரன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
    • இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


    இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார். இதில் 'சிட்டி தி ரோபோ' போன்ற வசனங்கள் இன்றளவும் பேசும் வசனங்களாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது.

    அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் 'கிளிமாஞ்சாரோ' பாடல் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் ஷூட் செய்யப்பட்டதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த பாடலை பாடிய சின்மயியையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். எல்லா இடங்களிலும் இந்தப் பாடல் ஒலித்தது.


    இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக கென்யா சென்றுள்ள பாடகி சின்மயி, அங்குள்ள மாசாய் பழங்குடி மக்களுடன் இணைந்து 'கிளிமாஞ்சாரோ' பாடலை பாடி ஆடியுள்ளார். அது தொடர்பான வீடியோவை சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'எந்திரன்'.
    • இப்படத்தின் கதை திருட்டு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.


    எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்றும் தமிழில் வெளியான 'ஜூகிபா' என்ற தனது கதையை தழுவி எடுக்கப்பட்டதாகவும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.


    நீதிபதி உத்தரவு

    அதாவது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். சவுந்தர் இந்த தீர்ப்பில் மனுதாரரின் கதைக்கும் 'எந்திரன்' படத்தின் கதைக்கும் அதிக அளவு வேறுபாடுகள் இருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் வழக்கின் செலவை மனுதாரர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து நீண்ட காலமாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன்.
    • இப்படம் பல படங்களின் வசூலை எந்திரன் திரைப்படம் முறியடித்து சாதனை படைத்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.


    எந்திரன்

    இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார். இதில் 'சிட்டி தி ரோபோ' போன்ற வசனங்கள் இன்றளவும் பேசும் வசனங்களாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது. மேலும், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படங்களின் வசூலை எந்திரன் திரைப்படம் முறியடித்து சாதனை படைத்தது.


    எந்திரன்

    இந்நிலையில், 'எந்திரன்' திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது. அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் ஜூன் 9-ல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை பல நடிகர்களின் படங்கள் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியான நிலையில் எந்திரன் திரைப்படம் முதல்முறையாக புதுப்பொலிவுடன் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×