என் மலர்
சினிமா செய்திகள்

கென்யா மக்களை தமிழ் பாடல் பாட வைத்த சின்மயி- வைரலாகும் வீடியோ
- எந்திரன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
- இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார். இதில் 'சிட்டி தி ரோபோ' போன்ற வசனங்கள் இன்றளவும் பேசும் வசனங்களாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும் 'கிளிமாஞ்சாரோ' பாடல் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் ஷூட் செய்யப்பட்டதாக அப்போதே தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த பாடலை பாடிய சின்மயியையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். எல்லா இடங்களிலும் இந்தப் பாடல் ஒலித்தது.
இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக கென்யா சென்றுள்ள பாடகி சின்மயி, அங்குள்ள மாசாய் பழங்குடி மக்களுடன் இணைந்து 'கிளிமாஞ்சாரோ' பாடலை பாடி ஆடியுள்ளார். அது தொடர்பான வீடியோவை சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Kilimanjaro with Maasai ! pic.twitter.com/uwI5EVTjwi
— Chinmayi Sripaada (@Chinmayi) November 17, 2023