search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலும் 2 பேருக்கு வலை வீச்சு"

    • ரூ.23 லட்சம் பணத்தையும் கொள்ளை யடித்து சென்ற னர்.
    • இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    சென்னிமலை, 

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இருந்து அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு தொழிற்சாலைக்கு ஊழியர் சத்தியமூர்த்தி (வயது 47) என்பவர் கடந்த மாதம் 23-ந் தேதி நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ரூ.23 லட்சம் பணத்தை எடுத்துச்சென்றார்.

    அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வழி மறித்து சத்தியமூர்த்தியை காருடன் கடத்தி சென்று அவரை கட்டிப்போட்டு ரூ.23 லட்சம் பணத்தையும் கொள்ளை யடித்து சென்றனர்.

    இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    அதன்படி கடந்த 28-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கண்ணங்குடி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த மனோகர் (29) மற்றும் அதே ஊரை சேர்ந்த நவநீதன் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கண்ணங்குடி, கள்ளர் தெருவை சேர்ந்த நல்லையன் என்பவரின் மகன் இளையராஜா (வயது 31) மற்றும் கோவை செட்டிபாளையம் காந்திஜி ரோட்டை சேர்ந்த சீமான் என்பவரின் மகன் அலெக்சாண்டர் (வயது 32) ஆகிய மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இளையராஜா திருச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் விற்பனையாளராகவும், அலெக்சாண்டர் கோவை யில் சொந்தமாக லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் இளையராஜா மோட்டார் சைக்கிளிலும், அலெக்சாண்டர் கார் ஓட்டுனராகவும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ரூ.23 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற முக்கிய குற்றவாளிகளான புதுக்கோட்டை மாவட்ட த்தில் இவர்கள் ஊர்களை சேர்ந்த ராஜசேகர் (வயது 31), ராமதுரை (வயது 32) என தெரியவந்தது.

    இவர்கள் இருவரும் கொள்ளை அடிக்க உதவி செய்ததற்காக இளைய ராஜாவுக்கும், அலெக்சாண்டருக்கும் தலா ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த பணத்தில் இளையராஜாவிடம் இருந்து ரூ.77 ஆயிரம் மற்றும் அலெக்சாண்டரிடம் இருந்து ரூ.78 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 செல்போன் ஆகியவற்றை யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இளையராஜாவையும், அலெக்சாண்டரையும் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.23 லட்சம் பணத்துடன் சென்ற முக்கிய குற்ற வாளிகளான ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×