search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமீதி திருவிழா"

    • 40 ஆண்டுக்குப் பிறகு கோவில் திருவிழா இந்தாண்டு கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரும்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த திரவுபதி யம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மகாபாரத கதையை மையமாக வைத்து 18 நாட்கள் திருவிழா நடை பெறும். 40. ஆண்டுக்குப் பிறகு கோவில் திருவிழா இந்தாண்டு கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்புபூஜைகள், தெருகூத்து, இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை, இன்னிசையுடன், இரவில் சாமி திருவீதி உலா மற்றும் பக்காசூரன் திருவிழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 5 மணிக்கு அரவாண்வீதியுலா, மதியம் 12 மணி வரை மகாபாரத பஞ்சபாண்டவர்கள்வர்கள் கதையை மையமாக கொண்ட மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 3 மணியளவில் அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும் நடந்ததது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு திமீதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப் பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன் பிறகு அம்மனுக்கு நடந்த மகாதீபாராதனையிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும் நாளை தர்மர் பட்டாபிஷேகம் நடை பெறுகிறது. 40 ஆண்டுக்கு பிறகு இந்த திருவிழா நடை பெறுவது குறிப்பிடத்தக்கது.

    ×