search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்"

    • கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலாளர்கள் கூட்டமும் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.

    சென்னை:

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கியுள்ளன.

    தி.மு.க. குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பணிகளை தொடங்கி உள்ளது. 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை தி.மு.க. மேலிடம் நியமனம் செய்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    அடுத்தகட்டமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறார்.

    இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணிகளில் உள்ள தோழமைக் கட்சிகளும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தங்களை தயார்படுத்த தொடங்கியுள்ளன.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் பற்றி விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தவிர தேர்தல் கூட்டணி, பிரசாரம் தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளார்.

    அதன்படி வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகிற 6-ந்தேதி (புதன் கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாம் தமிழர் கட்சியை சேர்க்க முயற்சி எடுத்ததாகவும் ஆனால் தனித்து போட்டியிடும் முடிவில் சீமான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • கூட்டணி பேச்சுவார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி நேரடியாக கவனிக்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முழு வேகத்துடன் சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

    பா.ஜனதாவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி வரலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்திக்காமல் தவிர்த்ததன் மூலம் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் வழங்கினார்கள். கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் தங்கள் பக்கம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.


    நாம் தமிழர் கட்சியை சேர்க்க முயற்சி எடுத்ததாகவும் ஆனால் தனித்து போட்டியிடும் முடிவில் சீமான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவில்லை.

    எனவே சிறு சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து 10 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு 30 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைகளை எடப்பாடி பழனிசாமி நேரடியாக கவனிக்கிறார்.

    இன்னொரு பக்கத்தில் கீழ்மட்டத்தில் நிர்வாகிகளை முடுக்கி விடவும் திட்டமிட்டு உள்ளார். இதற்காக வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஏற்கனவே மிகவும் அடிப்படையாக கருதப்படும் பூத் கமிட்டிகளை அமைக்கவும், அதை மேற்பார்வையிட்டு தகவல்கள் அடங்கிய பென்டிரைவை வழங்க பொறுப்பாளர்களுக்கும், பூத் கமிட்டி பட்டியலை வழங்க மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட்டு இருந்தார்.

    அதன்படி எடப்பாடி பழனிசாமியிடம் பட்டியல்களை ஒப்படைத்தனர். அதில் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இன்னும் 40 சதவீதம் பூத் கமிட்டி அமைக்க வேண்டி உள்ளது.

    இடையில் மழை காரணமாக அந்த பணிகள் விரைவுபடுத்தப்படவில்லை. நடைபெற இருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பூத் கமிட்டி நிலவரம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களிடமும் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளார். குறிப்பிட்ட காலகெடுவுக்குள் நூறு சதவீதம் பூத் கமிட்டி அமைக்காத மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே தெரு முனை கூட்டங்கள், திண்ணை பிரசாரங்கள் செய்ய திட்டமிட்டு மழையின் காரணமாக நடைபெறவில்லை. அவற்றை நடத்துவது பற்றியும் விவாதிக்க உள்ளார்.

    அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தேர்தல் வேலைகளை உடனடியாக தொடங்க பல்வேறு வேலை திட்டங்களையும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
    • அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்று உள்ள எடப்பாடி பழனிசாமியின் பின்னால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அணிவகுத்து உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நாளை நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மத்தியில் விரிவாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆகஸ்ட் மாதம் மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளிடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து மதுரை மாநாடு தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மாநாட்டை பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட பிரசார மாநாடாக நடத்தவே அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அந்த மாநாட்டில் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்னர் அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பான அறிவிப்பை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வெளியிட உள்ளனர்.

    இதன்மூலம் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×