search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறி"

    • சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
    • வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    நல்லெண்ணெய் - பொறிக்க

    மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

    இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு

    கடலை பருப்பு 100 கி

    உளுந்தம் பருப்பு - 100 கி

    மிளகு - 50 கிராம்

    கருப்பு எள்ளூ - 50 கி

    சீரகம் - 50 கி

    வரமிளகாய் - 50 கி

    இட்லி மாவு - 1 கிலோ


    செய்முறை:

    • முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.

    • இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள், தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்ந்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, கருப்பு எள்ளு, சீரகம், வரமிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    • வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

    • ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டுகளில் மேல் ஒரு துணி போட்டு, முதலில் இட்சி மாவை 1/2 கரண்டி ஊற்றவும்.

    • பின்னர் தயாரித்து வைத்துள்ள மட்டன் கொத்து கறி கலவையை சிறிதளவு வைக்கவும்.

    • பின்னர் மறுபடியும் 1/2 கரண்டி அளவு மாவை ஊற்றி பின்னர் இட்லி தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    • பின்னர் வெந்த இட்லிகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    • பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்திருக்கும் பொடியை போட்டு சிறு தீயில் கிளறவும்.

    • பின்னர் தயாரித்து வைத்துள்ள கறி இட்லியை பொடி கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

    • இதோ தமிழ்நாட்டு ஸ்டைல் கறி இட்லி ரெடி.

    • எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
    • உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.

    மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.

    புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.

    மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.

    இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.

    மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.

    இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • ‘காய்கறி’ விலை கடும் உயர்வால் ‘கறி’க்கு பொதுமக்கள் மாறினர்.
    • இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை

    பொதுவாக ஆன்மீகத் திற்கு உகந்ததாக கருதப்படும் கார்த்திகை, மார்கழி மாதங் களில் அசைவ பிரியர்கள் சைவத்திற்கு மாறுவார்கள் என்பதாலும், சபரிமலை யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டும் காய்கறிகளின் விலை உச்சம் தொடும்.

    அதேபோல் சுபமுகூர்த்த நாட்கள் மிகுந்த தை, மாசி வைகாசி, ஐப்பசி மாதங்க–ளில் சராசரியாக காய்கறி–களின் விலை உயரும். மற்ற மாதங்களில் காய்க–றிகளின் விலை குறைவா–கவே இருக் கும்.

    ஆனால் தற்போது வழக் கத்திற்கு மாறாக ஆனி மாதத்தில் காய்கறிகளின் விலை எதிர் பாராத அள–வுக்கு புதிய உச்சம் தொட் டுள்ளது. குறிப்பாக தக்கா–ளியின் விலை 100 ரூபாயை தாண்டி–யுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

    அதேபோல் சின்ன வெங் காயத்தின் விலையும் 100 எட்டி இல்லத்தரசிகளுக்கு பெரும் சுமையை கொடுத் துள்ளது. இதனால் பெரும் பாலான உணவகங்கள் தக்காளியை தவிர்த்து வருகி–றது. அதேபோல் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் சைவம், அசைவம் இரண்டையும் சாப்பிடுபவர்கள் அசை–வத்திற்கு தற்போது முழுமை–யாக மாறியுள்ளனர். காய்க–றிகளின் விலையை விட இறைச்சி வகைகளின் விலை குறைவாக இருப்ப–தாக கருத்து தெரிவித்துள்ள அவர்கள் காய்கறிகளின் அபரிமிதமான இந்த விலையேற்றம் தங்களது அன்றாட செலவை இரு–மடங்காக்கி விட்டதாக ஆதங்கத்துடன் தெரிவித்து வருகிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடு–முறை தினமான இன்று காய்கறி மார்க்கெட்டுகள் பெரும்பாலும் வெறிச்சோ–டியே காணப்பட்டன. அதற்கு மாறாக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே–போல் மீன் விற்பனை–யும் இன்று அமோகமாக இருந் தது.

    மதுரை மாநகரில் நெல் பேட்டை, தெற்குவாசல், கருப்பாயூரணி, நரிமேடு, காளவாசல், மாட்டுத்தா–வணி, பழங்காநத்தம், மக–பூபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு, மீன் விற்பனை கடை–களில் ஏராளமானோர் குவிந்தனர்.

    இதில் ஆட்டுக்கறியை பொறுத்தவரை எலும்புடன் கிலோ ரூ.700, தனிக்கறி ரூ.800 என்றும், கறிக்கோழி கிலோ ரூ.190, நாட்டுக்கோழி கிலோ ரூ.550 முதல் ரூ.600 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. சராசரியாக ஆட்டு இறைச் சிக்கு ஒரு கடையில் 10 முதல் 15 ஆடுகள் வரை விற் பனையானது.

    அதிரடியான இந்த விற்பனையால் இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×