search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் ஐபோன்"

    • டாடா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது.
    • டாடாவின் நர்சபுரா ஆலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது.

    இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

    இந்நிலையில், கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.

    நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகமாகும்.

    இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.

    2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

    • 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது.
    • போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் ஐ-போன்களின் விலை வழக்கமாகவே மற்ற போன்களின் விலையை விட அதிகம் என கேள்விபட்டிருப்போம். அதே நேரம் பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன் ஒன்று ரூ.1.5 கோடிக்கு ஏலம் போய் உள்ளது. 2023-ம் ஆண்டிற்கான கோடை கால பிரீமியர் ஏலத்தை எல்.சி.ஜி. நிறுவனம் நடத்தியது.

    இதில் 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது. ஆரம்ப விலையாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏலம் முடிவில் அந்த ஐ-போன் 1 லட்சத்து 90 ஆயிரத்து 322 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகி உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.56 கோடி ஆகும். இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.

    ×