search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைத்தனர்"

    • நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு புகார்கள் சென்றது.

    ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ராமன் புதூர் பகுதியில் பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் கேப் ரோடு பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி வந்த பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தனர். உடனடியாக அந்த பஸ்களை போக்கு வரத்து பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    படியில் பயணம் நொடியில் மரணம். எனவே மாணவர்கள் கவனமாக பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கி றார்கள். நீங்கள் பஸ்களில் வீட்டிற்கு செல்லும் போதும் பள்ளிக்கு வரும்போதும் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்வது நல்லதாகும் என்று அறிவு ரைகளை கூறினார்கள்.

    ஒரு சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இரு ந்ததையடுத்து மாணவர்களை அந்த பஸ்சிலிருந்து இறக்கி பின்னால் வந்த பஸ்களில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ×