என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாக்பால்"
- இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது.
- இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 166 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் "பாஸ்பால்" என்ற வார்த்தை சமீப காலங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது டெஸ்ட்டில் அதிரடியான பேட்டிங்கின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கண்டறிந்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மூலம் இது பிராண்ட் ஆனது. நடந்து வரும் ஆஷஸ் தொடரின் காரணமாக தலைப்புச் செய்திகளில் இந்த வார்த்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதேபோல மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து ராகுல் டிராவிட் அணியைக் குறிக்கும் வகையில் 'டிராவ்பால்' என்ற பிராண்ட் உருவானது.
இந்த வரிசையில் பாக்பால் என்ற பிராண்ட் உருவாகி இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இதனை குறிக்கும் வகையிலும் பாஸ்பால் மற்றும் டிராவ்பால் வரிசையில் "பாக்பால்" என்ற பிராண்ட் பாகிஸ்தான் கிரிக்கெட்டை குறிக்கும் என்று அக்தர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் 28.3 ஓவர்களில் 145 ரன்களை எடுத்தது. ரன் விகிதம் ஓவருக்கு 5-க்கு மேல் உயர்ந்தது. இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 166 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.