search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்க்கால் வெட்டும் பணி"

    • கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
    • வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சேத்–தி–யாத்–தோப்பு, ஆக.8-

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது. தற்–போது நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செ ய்து நிலக்கரி வெட்டிஎடுக்க என்.எல்.சி. முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சுரங் 2ல் இருந்து 60 மீட்டர் தூரத்தில் உள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஏனெனில் மழைக்காலங்களில் சுரங்த்திற்குள் தண்ணீர் புகுவதை தடுக்கவும், சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறு அமைப்பது அவசியம் என்று என்.எல்.சி. கருதிது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறுக்கு வாய்க்கால் வெட்டப்படடுள்ளது. மீதமுள்ள 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டும் வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உளளிட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த விளை நிலங்ளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி என்.எல்.சி. நிர்வாகம் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் பயிர்களை அழித்து புதிய பரவனாறுக்காக வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்தாலும் கூட, பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி என்.எல்.சி. அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அன்றைய தினம் மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பணி தொடங்கி யது. முதலில் பகலில் மட்டுமே நடைபெற்று வந்த பணி தற்ேபாது இரவுபகலாக நடந்து வருகிறது. கம்மாபுரம் ஒன்றியம் ஆதனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    என்.எல்.சி. சுரங்க பணிக்காக அங்குள்ள சாலையை உடைத்து கடந்த சில மாதங்களாக வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனால் அக்கிராம மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாய்க்கால் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சாலையை சீரமைத்து தருவதாகவும், மின்விளக்கு வசதி செய்து தருவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

    ×