search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமித்"

    • 4-வது ஓவர் வீசிய பும்ரா ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
    • அதன்பின் 13-வது ஓவரில்தான் பும்ரா பந்து வீச அழைக்கப்பட்டார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 277 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதல் ஓவர் வழங்கப்படவில்லை. 4-வது ஓவர்தான் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    6-வது ஓவர் அவருக்குப் பதிலாக கோட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் கோட்சி 23 ரன்கள் வாரி வழங்கினார். அதன்பின் 12 ஓவரில் 173 ரன்கள் குவித்த நிலையில் பும்ராவிற்கு மீண்டும் 13-வது ஓவர் வழங்கப்பட்டது.

    ஏன் முதல் ஓவருக்குப் பிறகு பும்ராவிற்கு 13-வது ஓவர் வரை வாய்ப்பு வழங்கப்படவில்லை என தான் குழப்பம் அடைந்ததாக வர்ணனையாளராக செயல்படும் ஆஸ்திரேலிய நடசத்திர வீரர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுமித் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுடைய பந்து வீச்சை மாற்றியது குறித்து நான் குழப்பம் அடைந்தேன். பும்ரா 4-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் அவர் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதன்பின் அவரை 13-வது ஓவர் வரை பார்கக் முடியவில்லை. அதற்குள் ஐதராபாத் அணி 173 ரன்கள் விளாசிவிட்டது.

    அதற்குள் அனைத்து சேதாரங்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டு விட்டது. நீங்கள் உங்களுடைய சிறந்த பந்து வீச்சாளரை உடனே பந்து வீச அழைப்பது அவசியம். அந்த நேரத்தில் அவர் சில விக்கெட் எடுத்திருக்க முடியும். 13-வது ஓவரில் கொண்டு வந்ததன் மூலம் அவர்களது யுக்தியை தவற விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்.

    சில விசயங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தவறாக அமைந்தது. அதில் முக்கியமான ஒன்று இது. உலகின் சிறந்த பந்து வீச்சாளரை ஒரு ஓவருடன் நிறுத்த முடியாது.

    பும்ராவை முன்னதாக பந்து வீச அழைத்து, ஒரு ரிஸ்க் எடுத்திருந்தால் 277 ரன்கள் என்பது கண்டிப்பாக 240 ஆக குறைந்திருக்கும். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் இதை சேஸிங் செய்திருக்கலாம். ஆகவே, 13 ஓவர் வரை ஒரு ஓவர்தான் அவர் வீசியது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இவ்வாறு சுமித் தெரிவித்துள்ளார்.

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
    • 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    சிட்னி:

    இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22-ந் தேதி மொகாலியில் நடக்கிறது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், 20 ஓவர் மற்றும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருந்த ஸ்டீவன் சுமித் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அணியில் இருந்து விலகி இருக்கின்றனர்.

    இதேபோல் ஒருநாள் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் ஒதுங்கி இருக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை மிட்செல் மார்ஷ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆஷ்டன் டர்னர், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் கூடுதலாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு வரும் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்திய தொடருக்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×