search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபைல் ஆப்"

    • R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.
    • டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    R-Wallet என்பது UTS (முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் முறை) மொபைல் பயன்பாட்டில் உள்ள வாலட் அம்சமாகும்.

    இது இந்திய ரெயில்வே பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கவும், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்களில் பணம் செலுத்தவும் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், ரெயில் பயணிகள் R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள்) மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு, R-Wallet ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.

    டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    UTS மொபைல் செயலியில் உள்ள R-Wallet அல்லது ATVM மூலம் டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிறப்பு, இறப்பு சான்றிதழ், டிரேடு லைசென்ஸ், கட்டிட திட்ட வரைவு அனுமதி உள்ளிட்ட சேவைகளையும் இணைய தளத்தின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்த படியே பெறலாம்.
    • இந்த செயலியை பதி விறக்கம் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய் தால், உங்கள் வரி பாக்கி களை வங்கி டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ முறையில் ஆன்லைனில் கட்டலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சியில், 33 வார்டுகளிலும் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வரிகளை நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாலும், மக்களின் நலன் கருதியும் நகராட்சிக்கு இணையம் மற்றும் மொபைல் ஆப் வழியாக வரி கட்டும் திட்டத்தை நகராட்சி தலைவர் பரிதா நவாப் நேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சியில், சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி மற்றும் தொழில் வரி, குப்பை விரி உள்ளிட்டவைகளை நகராட்சி நிர்வாக ஆணையகரகத்தின் இணையதளத்தின் மூலம் நேரடியாக கட்டலாம்.

    பிறப்பு, இறப்பு சான்றிதழ், டிரேடு லைசென்ஸ், கட்டிட திட்ட வரைவு அனுமதி உள்ளிட்ட சேவைகளையும் இணையதளத்தின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே பெறலாம்.

    இணையதளத்தின் மூலம் கிருஷ்ணகிரி நகராட்சிக்குள் வசிக்கும் நபர்கள் தங்களை பதிவு செய்தால், அதில் வரும் 'க்யூ ஆர் கோட்' மூலம் வரி பாக்கிகளை செலுத்தியும், சலுகைகளையும் பெறலாம்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள், மற்றும் நகராட்சிக்கு தேவைப்படும் கோரிக்கைகளையும் இதில் தெரிவிக்கலாம்.

    மேலும் 'மொபைல் ஆப்' மூலம் வரி கட்டும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்தால், உங்கள் வரி பாக்கிகளை வங்கி டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ முறையில் ஆன்லைனில் கட்டலாம்.

    எனவே வரிபாக்கிகளை பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பெற்று பயனடையலாம்.

    மேலும் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட த்தில் இணையாதவர்கள், பணம் கட்டாதவர்களையும் இணைக்கும் வகையில், 10 பேர் கொண்ட, 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பாதாள சாக்கடை திட்ட இணைப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நகராட்சி ஆணையாளர் வசந்தி, கணினி திட்ட உதவியாளர் ஜெயலட்சுமி, செயற் பொறியாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் தாமோதரன், இளநிலை பொறியாளர் அறிவழகன், இளநிலை உதவியாளர்கள் சரவணன், பாலச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×