search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஐபி தரிசம்"

    • ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்.
    • பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழா நடைபெற உள்ளன.

    வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

    பிரமோற்சவ விழா போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது:-

    செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின் முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கை வழங்குகிறார்.

    வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.

    மேலும் வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. அறைகள் முன்பதிவு அன்னபிரசாதம் லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.

    பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மகாமுனி ஜெயந்தியை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,132 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 963 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×