search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி தத்தெடுப்பு"

    • நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.
    • இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் உருவாக்கி வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் அடிப்படை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்து.

    இதற்காக இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை அளித்து தற்போது இந்த இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து வண்ண மயமாக மாற்றி உள்ளனர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

    அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் உருவாக்கி வருகின்றனர். மேலும், நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிட்டு வந்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள்ளாக வே நிதியைத் திரட்டி ரூ. 50 லட்சம் மதிப்பில் பள்ளியை சீரமைத்து உள்ளனர்.

    அதேபோன்று வருகிற அக்டோபர் 15-ந்தேதி நடைபெற உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பல்லாயிரக்கணக்கான முன்னாள் மாணவர்களை வருகை தர வைத்து சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ×