என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாக்பூர் பல்கலைக்கழகம்"
- கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
- பாடத்திட்டத்தை காவிமயமாக்க நடக்கும் முயற்சி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு ஆகியவற்றை சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க பற்றிய பகுதிகளை நீக்க முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக ஏற்கனவே இடம் பெற்று இருந்த கம்யூனிஸ்டு கட்சி வரலாறு மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகளின் வரலாற்றை நீக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சில மாநில கட்சிகளின் வரலாற்றை சேர்க்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதுகலை வரலாறு பாடத்தின் 4-வது செமஸ்டரில் இந்த பாடத்திட்டங்கள் இடம் பெற உள்ளன. இந்த நிலையில் கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க பற்றிய பாடப்பகுதிகள் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மாநில எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மேலும் கல்வியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். பாடத்திட்டத்தை காவிமயமாக்க நடக்கும் முயற்சி என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.