என் மலர்
முகப்பு » துப்புரவு பணியாளர் பலி
நீங்கள் தேடியது "துப்புரவு பணியாளர் பலி"
- அரசு பஸ் எதிர்பாராத விதமாக ரங்கசாமி மீது மோதியது.
- ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்பவர் ராஜா என்கிற ரங்கசாமி (41). இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ரங்கசாமி வேலை முடித்து விட்டு சொந்த வேலை காரணமாக நம்பியூர் மேடை அருகே ரோட்டின் வலது பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ரங்கசாமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி சம்பவ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
X