search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுசுவை உணவு"

    • உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும்.
    • ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும்.

    தமிழர்களின் பண்பாடுகள் எல்லாம் தலைசிறந்த விருந்தோம்பல் என்பதும் ஒன்று. உபசரிப்பு என்பது உதட்டளவில் இல்லாமல் மனதளவில் நிறைந்திருக்க வேண்டும். விருந்தளிக்கும் பொழுது சிறப்பாக எல்லா சுவைகளும் கலந்த விதத்தில் தலை வாழை இலைபோட்டு புன்னகையோடு விருந்தளித்தால் அறுசுவை உணவோடு அற்புதமான சாப்பாடு என்று சொல்வார்கள்.

    அந்த ஆறு சுவைகளுமே மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற சுவைகளாகும். இந்த ஆறு சுவைகளையும் யார் ஒருவர் உட்கொண்டு வந்தாலும் உடலில் நோய்க்கான அறிகுறிகளே இருக்க முடியாது. ஆறுசுவையும் ஒரே காலத்தில் ஒரு சேரக்கிடைப்பது என்பது அரிது. எனவே அதற்கான காலங்கள் வரும் பொழுது அவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

    ஒவ்வொரு மனிதனும் உடல் நலத்தை பேணுவதற்கு அத்தியாவசியத்தேவை நல்ல சத்துள்ள உணவாகும். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவை. இவற்றை தேவைக்கேற்ப சாப்பிட்டால் தேகநலன் சீராகும்.

    வருடத்தின் முதல் நாள், மாதத்தின் முதல் நாட்களில் முக்கியமாக சதுர்த்தி, பொங்கல் விழா எனப்படும் முக்கிய நாட்களில் பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் வைப்பது வழக்கம். அதில் வெல்லத்தை சேர்த்து இனிப்பு சுவையை கூட்டிக் கொள்கின்றோம். அதேபோல மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு அன்று நமது இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகுவதற்காக உப்பு வாங்குவது வழக்கம். அதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகின்றோம்.

    நமது உடம்பில் உள்ள எலும்பு, நரம்புகளுக்கு கால்சியம் சத்து தேவை. அதை சோடியம் குளோரைடு என்னும் உப்பின் மூலமாகப் பெறுகின்றோம்.

    வருடப்பிறப்பு அன்று எல்லா சுவைகளும் கலந்த உணவை நம் முன்னோர்கள் வைப்பது வழக்கம். இனிப்பு, உப்பு, கசப்பு. கார்ப்பு. துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறுசுவைக்கும் ஏற்ப சாம்பார். கூட்டு. பொரியல். அப்பளம், பாயசம், வேப்பம்பூ பச்சடி, மாங்காய் இனிப்பு பச்சடி, வாழைப்பூ வடை என்றெல்லாம் வைத்து உணவு பரிமாறிய பிறகு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்து விருந்தினரை கவனிப்பது வழக்கம். பாக்கில் துவர்ப்பு சத்தும் வெற்றிலை ஜீரண சக்தியையும், சுண்ணாம்பு கால்சியம் சத்தையும் கொடுக்கின்றது.

    பொதுவாக வாழ்க்கை என்பது இன்பமும். துன்பமும், நன்மையும். தீமையும் கலந்து வருவதுதான். எந்த விழாவிற்கு சென்றாலும் முதலில் இனிப்புத் தான் கொடுப்பர். பிறந்தநாள் என்றாலும் திருமண நாள் என்றாலும், திருமணத்தில் தாலிகட்டும் நேரத்திலும் இனிப்பு வழங்குவதுதான் வழக்கம். இவ்வாறு விழா நாட்களில் இனிப்பை உட்கொண்டாலும் மற்ற நாட்களில் பிறகவைகளும் நமக்குத் தேவை. எப்படித்தான் இனிப்பு சுவை இருந்தாலும் கசப்பு சுவையும் நம் உடலுக்கு அவசியம் தேவை.

    இன்பத்தை பார்க்கும் நாம் துன்பத் தையும் சமமாகப் பார்க்க வேண்டும். உதாரணமாக கரும்பு இனிப்பின் இருப்பிடம். வேம்பு கசப்பின் இருப்பிட மாகும். இதனால் தான் வருடப் பிறப்பன்று கசப்பாக இருந்தாலும் வேப்பம்பூ பச்சடியை சேர்க்கின்றோம்.

    தை மாதம் இனிப்புச்சுவை தரும் கரும்பினையும் உண்கின்றோம். ஆடி மாதத்தில் அம்பிக்கையைக் கொண்டாட வேப்பிலை எடுத்துச்செல்வர். கூழ் காய்ச்சிக் கொடுப்பதில் வேப்பிலை தூவுவர். வேம்பு என்பது ஒரு கிருமி நாசினி. சர்வரோக நிவாரணி என்று கூடச் சொல்ல லாம். இதைத்தவிர நீரழிவு, புற்றுநோய் தடுப்பு. அம்மை நோய் தடுப்பு, மற்றும் நம் உடலில் உருவாகும் நச்சுக் களை அழிப்பதற்கும் பயன்படுகின்றது.

    வீடுகளில் விருட்சங்களாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு தெய்வீக மூலிகை வேம்பாகும். கரும்பிற்கும், வேம்பிற்கும் உள்ள சுவை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தாலும் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இரண்டும் சமநிலை வகிக்கின்றது.

    உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் கூறியுள்ளார். எனவே ஆரோக்கியத்தில் அக்கரை செலுத்தினால் தான் சீரோடும். சிறப்போடும் ஒவ்வொருவரும் வாழமுடியும். எனவே அன்றாட வாழ்வில் அறுசுவை உணவால் ஆரோக்கிய வாழ்வை நாம் பெறவாம்.

    • கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
    • தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    பொன்னேரி:

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளர் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊடகப் பிரிவு தலைவர் கோகுல், கிளை தலைவர் கண்ணன், நிர்வாகி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னேரி நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பொன்னேரி அடுத்த டி. வி. புரத்தில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செயலாளர் பிரபு ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    ×