search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மெட்ரோ திட்டம்"

    • மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும்.
    • வெளிநாட்டு கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும்.

    சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு 65 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:-

    ரூ.63246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 65 தவீதத்தை மத்திய அரசே வழங்கும்.

    மேலும், இதுவரை 90 சதவீத அளவிற்கு மாநில அரசின் நிதியாக கொண்டு மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டது.

    தற்போது, மத்திய அரசின் திட்டமானதால் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும்.

    எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும்.

    மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்டுக்கு நேரடியாக நிதி வழங்கப்படும்.

    வெளிநாட்டு கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல் மத்திய அரசுக்கானதாக கருதப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் தற்போது சுரங்கப்பாதை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
    • சாத்திய கூறுகள் குறித்த அறிக்கை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

    மாதவரம்-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- சோழிங்கநல்லூர் இடையே 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில் தற்போது சுரங்கப்பாதை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ திட்டம் - 2 விரிவாக்க பணிகளுக்கான சாத்திய கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    கோயம்பேடு - ஆவடி, சிறுசேரி - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்க சாத்திய கூறுகள் குறித்த அறிக்கை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    ×