என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அலுவலர்கள் ஆய்வு"
- சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் அந்தியூர் பேரூராட்சி இணைந்து அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள சைவ மற்றும் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அந்தியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், அந்தியூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் உணவகங்களில் கலர் பொடி, அர்ச்சனா பவுடர், பழைய இறைச்சிகள் அப்புறப்படுத்தப்பட்டு எச்சரிக்கை செய்தனர். அந்தியூரில் 15 உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பழைய சமைத்த உணவு 5 கிலோ, பழைய மீன் 2 கிலோ, கலர் பவுடர், பழைய புரோட்டா உள்ளிட்டவைகளை கைப்பற்றி அளிக்கப்பட்டது.
மேலும் உணவின் தரம் பற்றி புகார் தெரிவிக்க 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு கடைக்கும் ஆயிரம் வீதம் 3 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.