என் மலர்
நீங்கள் தேடியது "க்யூ ஆர் கோடு"
- யுடிஎஸ். மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தன.
உடுமலை :
திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், பாலக்காடு - சென்னை மற்றும் கோவை - மதுரை, பொள்ளாச்சி - கோவை உள்ளிட்ட ெரயில்கள் உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்கின்றன.இந்நிலையில் பயணிகள் நீண்ட வரிசையில் நிற்காமல், டிக்கெட் பதிவு செய்ய, யுடிஎஸ். மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ெரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் க்யூ ஆர் கோடு அமைத்து, ெரயில்வே நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ரெயில் நிலையம் அறிவிப்பு பலகையில், க்யூஆர் கோடு பார் யுடிஎஸ் ஆன் மொபைல் ஆப் என எழுதப்பட்டுள்ளது. அதில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் வகையில் ஒட்டப்பட்டு இருந்தன.
இதை பயணிகள் ஸ்கேன் செய்தால் மொபைல் ஆப்பிற்குள் செல்கிறது. அதன்பின் யுடிஎஸ்., மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் இருந்து முன்பதிவில்லாத டிக்கெட் (அன் ரிசவர்டு) சீசன் டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்து செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நேரம் வீணாகுவது, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என ெரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.