என் மலர்
நீங்கள் தேடியது "பெரம்பூர் ரெயில் நிலையம்"
- இருக்கல்லூரி மாணவர்கள் திடீரென ரெயில் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
- மாணவர்கள் மோதல் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இருக்கல்லூரி மாணவர்கள் திடீரென ரெயில் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
மாணவர்கள் மோதல் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையின் அழுகுரல் கேட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டனர்.
- குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே 3 மாத குழந்தையை துணியால் சுற்றி பை ஒன்றில் பால் பாட்டிலுடன் மர்ம நபர்கள் விட்டு சென்றுள்ளனர்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டனர்.
போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார், வள்ளுவர் கோட்டம் பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தனர்.
பிறந்து 3 மாதமே ஆன பெண் குழந்தையை விட்டுச்சென்ற மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜோலார்பேட்டையில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முதியவர் மீது மோதியது.
- பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடை அருகே இன்று காலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். அவர்யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






