search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லலித் குமார்"

    • ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னை அடித்து உதைத்தனர்.
    • லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்

    ஒடிசா மாநிலத்தின் கவர்னராக ரகுபர் தாஸ் பொறுப்பில் உள்ளார். அவரது மகன் லலித் குமார் அப்பாவை பார்க்க ஒடிசா வந்திருக்கிறார். அப்போது அவரை அழைத்து வர பூரி ரெயில் நிலையத்திற்கு கவர்னர் மாளிகை சார்பில் கார் அனுப்ப பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை அழைத்து வர சொகுசு கார் அனுப்பப்படவில்லை என்று ஆத்திரத்தில் கவர்னர் மாளிகை வளாகத்திலேயே பைகுந்த பிரதான் என்ற அதிகாரியை லலித் குமார் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக ராஜ்பவனின் பொறுப்பு அதிகாரி பைகுந்த பிரதான் கவர்னர் மாளிகையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில், "ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி பூரி ராஜ்பவனுக்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தங்குமிடங்கள் தொடர்பான வேலைகளை கவனிக்க ஜூலை 5 ஆம் தேதி முதல் ராஜ் பவனில் நான் வேலை செய்து வந்தேன்.

    இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி லலித்குமாரும் அவருடன் வந்த 5 நபர்களும் என்னிடம் தகாத முறையில் பேசியதோடு என்னை அடித்து உதைத்தனர். மேலும் லலித் குமார் அவரது காலில் உள்ள சூவை நக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    • லலித் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘லியோ’.
    • இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.

    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனர் லலித் குமார் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'அசுரவதம்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மாஸ்டர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், மகான், கோப்ரா போன்ற படங்களை தயாரித்தார்.


    தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான 'லியோ' திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ. 140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் லலித் குமார், "விக்ரம் சாரின் கோப்ரா, மகான் என இரண்டு படங்கள் ரிலீசாகாமல் இருந்தது. அதில் ஏதாவது ஒரு படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டிய சூழலில் இருந்தேன். வேறுவழியின்றி மகானை ஓடிடியில் ரிலீஸ் செய்தேன். கார்த்திக் சுப்பராஜை சமாதானப்படுத்தி தான் இந்த முடிவை எடுத்தேன்.


    மகான் திரைப்படம் ஓடிடியில் வெளியிட்ட பின்னர் விஜய் சார் போன் பண்ணி இதெல்லாம் தியேட்டர்ல ரிலீஸ் ஆக வேண்டிய படம், ஏன் இப்படி செஞ்சீங்கனு திட்டியபோது தான் தப்பு பண்ணிட்டமோனு ரொம்ப வருத்தப்பட்டேன்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×