என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரேம் சந்த் பைரவா"
- ராஜஸ்தானில் அமைச்சரவை இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் பஜன்லால் சர்மா வெளியிட்டுள்ளார்
- துணை முதலமைச்சர் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன
ராஜஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பஜன்லால் சர்மா முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா தேர்வு செய்யப்பட்டார். மேலும் 22 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற 22 அமைச்சர்களுக்கு இலாகாக்கல் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், அவர்களுக்கான துறைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை இலாகா தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சரின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்துறை, கலால் வரி, ஊழல் ஒழிப்பு உள்பட 8 துறைகளை தன் வசம் வைத்துக்கொண்டார். துணை முதலமைச்சர் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதலமைச்சரான பிரேம் சந்த் பைரவாவுக்கு உயர்கல்வி, ஆயுர்வேதா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் கிம்சாரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக மதன் திலாவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
- பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.
இதையடுத்து புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பஜன்லால் சர்மா புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை முதல்-மந்திரியாக திவ்யா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா இன்று ஜெய்ப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றனர். மேலும், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட பஜன்லால் சர்மா சங்கேனர் தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 48,081 வாக்குகள் வித்தியாசததில் தோற்கடித்தவர்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் நீண்ட காலமாக பணியாற்றிவர். ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே முதல்-மந்திரி பதவி அவரை தேடி வந்துள்ளது. பஜன்லால் சர்மா ராஜஸ்தான் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றான பத்பூரை பூர்வீகமாக கொண்டவர். அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்