search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாண்டி பனேசர்"

    • சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடரில் முன்னாள் நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், மகாயா நிடினி மற்றும் மான்டி பனேசர் ஆகியோர் இந்த தொடரில் அவரவர் நாட்டுக்காக விளையாட உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர் நோக்கி உள்ளனர்.

    • அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது.
    • இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    சுழலும் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்வார்கள். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் பயமின்றி விளையாடுவார்கள். குறிப்பாக இந்திய அணிக்கு ரோகித் சர்மா ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக இருப்பார். சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார்.

    அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்.

    ஒருவேளை ரோகித்தை இங்கிலாந்து அதிரடியாக விளையாடவிடாமல் வைத்திருந்தாலும் இந்தியா பிளான் பி வைத்து விளையாடுவார்கள். அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அவர்களின் இளம் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்க வேண்டும். இது தான் உங்களுடைய வெற்றிக்கான வழியாக இருக்கும்.

    இவ்வாறு பனேசர் கூறினார்.

    ×