என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்- கிறிஸ் கெய்ல், மகாயா நிடினி, பனேசர் ஆகியோர் பங்கேற்பு
Byமாலை மலர்3 Feb 2025 6:25 PM IST
- சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் முன்னாள் நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், மகாயா நிடினி மற்றும் மான்டி பனேசர் ஆகியோர் இந்த தொடரில் அவரவர் நாட்டுக்காக விளையாட உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர் நோக்கி உள்ளனர்.
Next Story
×
X