என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாக்ஸ்"
- ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.
- தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும்.
சுற்றுச்சூழல், காற்று, வெயில், மழை, குளிர் என அனைத்தும் பிறந்த குழந்தைகளுக்குப் புதிதாக இருக்கும். குழந்தைகளின் வருகை மகிழ்ச்சியைத் தந்தாலும் இதுப்போன்ற புதிய சூழலுக்கு எப்படி அவர்களைப் பராமரிப்பது? என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஒரு பெரும் சவால் தான். முதன் முறையாக குழந்தையை பெறும் தாயாக இருந்தால் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சமும் ஏற்படும். அதிலும் குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பெரும் சவாலாகவே அமையும்.
அரவைணப்பு:
குழந்தைகள் 9 மாத காலங்களுக்கு தாயின் வயிற்றுக்குள் கதகதப்புடன் இருக்கும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தில் பிறக்கும் சூழல் ஏற்பட்டால் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால் தாய்மார்கள் கங்காரு மதர் கேர் முறையைப் பின்பற்ற வேண்டும்.
பிறந்தவுடன் தாயின் அரவணைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகளைப் பார்ப்பதற்கு யார் வந்தாலும் தூக்க சொல்ல வேண்டாம். இது குழந்தைக்குத் தொற்று பாதிப்பிற்கு வழிவகுக்கும். அம்மாவின் அரவணைப்பு மற்றும் குளிருக்கு இதமான ஆடைகள் தான் குளிர்காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்றதாக அமையும்.
மசாஜ்:
தாயின் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆனால் குளிர்ந்த காற்று அவர்களின் சருமத்தை வறண்டு விடச் செய்கிறது. உடலின் வெப்பநிலையும் சமமாக இருக்காது. இந்தநேரத்தில் குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சுத்தமான இயற்கை எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
சூடான நீரில் குளிக்க வைத்தல்:
குழந்தையின் உடல் நலம் மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு அவர்களைக் குளிக்க வைக்க வேண்டும். குளிர்காலத்தில் சூடான நீரில் மட்டுமே அவர்களைக் குளிக்க வைக்கவும். எடைக்குறைவாக இருக்கும் குழந்தைகள் என்றால், குளிக்க வைக்க வேண்டாம். மாறாக காட்டன் துணிகளை சூடான நீரில் நனைத்து துடைத்தெடுக்கவும்.
ஆடை:
குழந்தைகளை சூடாகவும் குளிரின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் ஆடைகளின் தேர்வு முக்கியமானது. அதற்கென்று குழந்தைகளுக்கு எரிச்சலூட்டம் வகையிலான ஆடைகளை அணிய கூடாது. மிருதுவான ஸ்வெட்டர்கள், தொப்பிகள், கையுறைகள், சாக்ஸ் போன்றவற்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி:
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றைக் குறைக்க வேண்டும் என்றால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லை இருந்தால் மருத்துவரின் அறிவுரையின் படி தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது நல்லது.
தாய்ப்பால்:
பிறந்தவுடன் குழந்தைகளுக்கு தாய்மார்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் அதிகமாக குழந்தைகள் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவில் நல்ல தூக்கத்தில் இருந்தாலும், குழந்தையை எழுப்பிவிட்டு உட்கார்ந்து தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக் கொண்டு கொடுக்கவே கூடாது. மேலும் புதிதாகப் பிறந்த குழந்தையின் கழுத்துத் தசைகள் வளர நேரம் எடுக்கும் என்பதால் குழந்தைகளைத் தூக்கும் போது எப்போதும் தலையிலும் கை வைத்து தூக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
டயப்பர் மாற்றுதல்:
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பல டயப்பர்கள் தேவைப்படும். எனவே அடிக்கடி அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்