என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக தேர்தல் குழு"
- கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வந்துள்ள புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
- வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியின் மாநில நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரம் பற்றி கேட்டறிகிறார்கள்.
சென்னை:
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.வில் 5 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அமைத்துள்ளார்.
இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை செய்ய தி.மு.க. தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைப்பது. கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வந்துள்ள புகார்களை விசாரிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி அமைப்பு ரீதியாக மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் மாவட்டங்களை மேலும் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள இருக்கிறது.
ஏற்கனவே இளைஞரணி மாணவரணி, மகளிர் அணியுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ள இக்குழு இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளது.
அப்போது வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணியின் மாநில நிர்வாகிகளை அழைத்து கட்சி நிலவரம் பற்றி கேட்டறிகிறார்கள். அணிகளின் செயல்பாடு எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
- அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.
- ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? மக்களின் கோரிக்கைகள் என்னென்ன? என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவர் கோவி செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி., மருத்துவர் அணி எழிலன் எம்.எல்.ஏ., சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி கனிமொழி எம்.பி. தலைமையில் இந்த குழுவினர் வருகிற 5-ந்தேதி முதல் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்து கேட்க உள்ளனர்.
அதன்படி பிப்ரவரி 5-ந்தேதி தூத்துக்குடி, 6-ந்தேதி கன்னியாகுமரி, 7-ந்தேதி மதுரை, 8-ந்தேதி தஞ்சாவூர், 9-ந்தேதி சேலம், 10-ந்தேதி கோவை, 11-ந்தேதி திருப்பூர், 16-ந்தேதி ஓசூர், 17-ந்தேதி வேலூர், 18-ந்தேதி ஆரணி, 20-ந்தேதி விழுப்புரம் செல்கிறார்கள்.
அதன் பிறகு பிப்ரவரி 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் சென்னையில் கருத்து கேட்க உள்ளனர்.
தொழில் துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து கோரிக்கைகளை மனுவாக பெறுவார்கள்.
அதன் பிறகு ஓரிரு நாளில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்