search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகலாபுரம் வேதாரண்ய பெருமாள்"

    • நாகலாபுரம் தலம் 4 வேதங்களும் மீண்டும் திரும்ப கிடைக்கப்பெற்ற தலமாகும்.
    • எனவே இந்த தலம் ஞானம் தரும் தலமாக கருதப்படுகிறது.

    நாகலாபுரம் தலம் 4 வேதங்களும் மீண்டும் திரும்ப கிடைக்கப்பெற்ற தலமாகும்.

    எனவே இந்த தலம் ஞானம் தரும் தலமாக கருதப்படுகிறது.

    அதை உணர்த்தும் வகையில் ஆலய பிரகாரத்தில் ஹயக்கிரீவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    கல்வியில் குறை இருக்கும் மாணவர்கள் இங்கு வந்து ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பலன் பெறுகிறார்கள்.

    குறிப்பாக பவுர்ணமி தினத்தன்று காலை 8 மணிக்கு ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    • இந்த ராசி, நட்சத்திரத்துக்கு ஏற்பவே அந்த ஆலயத்தின் தல வரலாறும், பூஜை முறைகளும் கூட செய்யப்படும்.
    • இந்த தலத்தில் வழிபாடு செய்தால் எல்லா வகை தோஷங்களும் நீங்குவது ஐதீகமாக உள்ளது.

    பழமையான ஆலயங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு ராசி அல்லது நட்சத்திரம் பின்னணியாக அமைந்திருக்கும்.

    இந்த ராசி, நட்சத்திரத்துக்கு ஏற்பவே அந்த ஆலயத்தின் தல வரலாறும், பூஜை முறைகளும் கூட செய்யப்படும்.

    அந்த வகையில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் கேது பகவானுக்கு உரிய ஆலயமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று 4 வேதங்களையும் மீட்டு வந்ததால் இந்த தலம் கேது அம்சம் பெற்றதாக முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    இதனால்தான் இந்த தலத்தில் வழிபாடு செய்தால் எல்லா வகை தோஷங்களும் நீங்குவது ஐதீகமாக உள்ளது.

    குறிப்பாக கேது தோஷத்தால் அவதிபடுபவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால் அந்த தோஷம் நீங்கப்பெற்று பலன் பெறலாம்.

    ஏதாவது ஒரு சனிக்கிழமை பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் கேது தோஷத்தில் இருந்து உடனடியாக நிவர்த்தி பெற முடியும்.

    ×