search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை ஆசிரியர்"

    • வகுப்பறையில் வைத்து அவர் பீர் குடித்ததாக கூறப்படுகிறது.
    • பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு ஓடி சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கொத்த குடேம் மாவட்டம் திம்மாபேட்டை பஞ்சாயத்து ராஜிவ் நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.

    இதில் பதி பதி வீரய்யா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று குடிபோதையில் பள்ளிக்கு வந்தார்.

    மேலும் வகுப்பறையில் வைத்து அவர் பீர் குடித்ததாக கூறப்படுகிறது. போதை தலைக்கேறியதும் வகுப்பறையில் தரையில் படுத்து புரள ஆரம்பித்தார். இதனை கண்ட பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு ஓடி சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

    ஆசிரியருக்கு ஏதோ உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதோ என எண்ணிய பெற்றோர் பள்ளிக்கு ஓடோடி வந்தனர். அங்கு வந்தபோது தான் ஆசிரியர் மது குடித்துவிட்டு போதையில் உருண்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியரை குண்டு கட்டாக தூக்கி அருகே இருந்த மாட்டு கொட்டகையில் தூக்கிப் போட்டனர்.

    மாட்டு கொட்டகையிலும் போதையில் உருண்ட ஆசிரியர் சில மணி நேரத்திற்கு பிறகு எழுந்து சென்றார்.

    வகுப்பறையில் ஆசிரியர் பீர் குடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார்.
    • அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார்.

    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்து தூங்கியதாகவும், மாணவர்கள் ஏதாவது சந்தேகம் கேட்டால் அவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.


    ஆசிரியரின் இந்த நடத்தையால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியரை தாக்க தொடங்கினர். உடனே அந்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போதும் அவரை மாணவர்கள் துரத்தி சென்று அவர் மீது செருப்புகளை வீசி தாக்கி உள்ளனர்.

    அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 22 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×