search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாதி மாலிவால்"

    • புகார் குறித்து விசாரித்து 3 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது.
    • இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து தன்னை தாக்கியதாக பெண் எம்.பி சுவாதி மலிவால் டெல்லி போலீசிடம் முறையிட்டார். இந்தப் புகார் குறித்து விசாரித்து இன்னும் 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    விவாதத்தின் போது பங்கேற்ற பாஜக கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலித் மேயரை நியமிக்கக் கோரியும் முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    • டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆளும்கட்சியாக உள்ளது.
    • கெஜ்ரிவாலின் தனி செயலாளர் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளும்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி. சுவாதி மலிவால்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது கிடைத்துள்ள தகவலின்படி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து தன்னை பிபவ் தாக்கியதாக சுவாதி டெல்லி போலீசிடம் போன் செய்து முறையிட்டுள்ளார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு விரைந்த போலீசார் இதுதொடர்பான விசாரணையை தொடங்கினர்.

    சமீபத்தில் பிபவ் குமார், சட்டத்துக்குப் புறம்பான வகையில் கெஜ்ரிவாலின் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியிருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த 2007-ம் ஆண்டு அரசு அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாகவும் பிபவ் குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவரது சொந்த கட்சி பெண் எம்.பி.யின் குற்றச்சாட்டு அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    ×