என் மலர்
நீங்கள் தேடியது "சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா"
- சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26 இடங்களை வென்றுள்ளது.
- சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
அருணாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.
சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்கு கள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்கு டன் வெளியிடப்பட்டன.
சிக்கிமில் ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26 இடங்களை வென்றுள்ளது. மேலும் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதன்மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய முதலவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதலைவராகிறார். இதைத்தொடர்ந்து எஸ்.கே.எம் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடாத தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் மற்றொரு மாநில கட்சியான சிக்கிம் ஜன்னநாயக முன்னணி கட்சி 1 இடத்தில வென்றுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் 1 இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.