search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேஜஸ்வியாதவ்"

    • மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்வது பற்றி பேசப்பட உள்ளது..
    • நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவி.

    இந்தியா கூட்டணி கட்சி தலைவர்ளும் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இந்தியா கூட்டணி கட்சி களின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல், மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், சரத்பவார், தேஜஸ்வியாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சேரி, உத்தவ் தாக்கரே உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக மத்தியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்வது பற்றி பேசப்பட உள்ளது.

    இந்தியா கூட்டணி மத்தி யில் ஆட்சி அமைக்க வேண் டும் என்றால் மேலும் 38 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. இதை பெறுவதற்காக சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.

    ஆந்திரா, பீகார் இரு மாநி லங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தர தயாராக இருப்பதாக காங்கிரஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவி வழங்கவும் தயாராக இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்ற விறு விறுப்பும், எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.

    ஆனால் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என்று சந்திர பாபு நாயுடுவும், நிதிஷ்குமா ரும் திட்டவட்டமாக அறி வித்துள்ளனர். என்றாலும் இன்று மாலை அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடப்பதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

    ×