search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் மீது தாக்குதல்"

    • கீவ்வில் உள்ள மருத்துவமனை மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

    போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து ரஷியா சமீபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ, கிர்வி ரிஹ், சுலோவன்ஸ்க், கர்மட்ரோஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே, தலைநகர் கீவ்வில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், ரஷிய தாக்குதலைத் தொடர்ந்து கீவ் நகரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இருந்து புற்றுநோயுடன் போராடும் குழந்தைகளை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா நடத்திய குண்டுவீச்சு குழந்தைகள் மருத்துவமனையை கடுமையாக சேதப்படுத்தியது, இந்தக் கொடூர தாக்குதல் பல குடும்பங்களை பயமுறுத்தியது. ஏற்கனவே ஆபத்தான நோய்களுடன் போராடும் அவர்களின் குழந்தைகளையும் கடுமையாக பாதித்தது.

    இதனால் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் சிகிச்சையை எங்கு தொடர்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, 2 வயது மகனின் பெற்றோர் கூறுகையில், கடுமையான லிம்போபிளாஸ்டிக் லுகேமியா நோய்க்காக ஜூன் தொடக்கத்தில் இங்கு வந்தோம். ஐரோப்பாவில் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று என்பதால் இங்கு சிகிச்சை பெற முடிவு செய்தோம். ஆனால் தற்போது நடைபெறும் தாக்குதலால் எங்கு செல்வது என தெரியவில்லை என குறிப்பிட்டார்.

    ×