search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கேட்டிங் ஸ்டண்ட்"

    • ஆசம் ஷேக்கின் ரெயில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • இதனை அடுத்து ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.

    ஓடும் லோக்கல் ரெயிலில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் செய்து வைரலான மும்பையை சேர்ந்த ஃபர்ஹத் ஆசம் ஷேக் என்ற இளைஞர் இதே போன்று மீண்டும் ஸ்டண்ட் செய்த போது நடந்த விபத்தில் தனது ஒரு கை மற்றும் காலை இழந்துள்ளார்.

    இம்மாத துவக்கத்தில் ஆசம் ஷேக்கின் ரெயில் ஸ்கேட்டிங் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.

    அப்போதுதான் ஏப்ரல் 14 அன்று மஸ்ஜித் ரயில் நிலையத்தில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்த போது ஷேக் தனது ஒரு கை மற்றும் காலை இழந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    ஜூலை 14 ஆம் தேதி வைரலான அந்த வீடியோ இந்தாண்டு மார்ச் 7 ஆம் தேதி செவ்ரி ரெயில் நிலையத்தில் தனது நண்பரால் பதிவு செய்யப்பட்டது என்று ஷேக் அதிகாரிகளிடம் கூறினார். இந்த ஸ்டண்ட் பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ ஒன்றை ரெயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில், ஷேக் அவரது கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். யாரும் நான் செய்தது போல ஸ்டண்ட் செயல்களை செய்யவேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இத்தகைய செயல்கள் இது சட்டவிரோதமானது மட்டுமல்ல, உயிருக்கு ஆபத்தானது என்று அவர் கூறினார்.

    ×