search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி மகசூல்"

    • குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
    • 2-ம் மகசூலையாவது தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஜூன் 14-ந்தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரை வழக்கத்திற்கு மாறாக தமிழக அரசு இந்த ஆண்டு மிகவும் காலதாமதமாக திறந்த காரணத்தினால், அந்த தண்ணீரானது டெல்டா விவசாயிகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை.

    குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

    மேலும் எதிர்வரும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம், பூச்சி மருந்து போன்றவைகள் விவசாயிகளுக்கு போதிய அளவு தட்டுப்பாடின்றி கிடைத்திட தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதேபோல வறட்சி காலப்பயிரான பருத்தி விவசாயிகளின் முதல் தவணை மகசூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 2-ம் தவணை மகசூல் முழுவதும் சரியான விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

    தனியார் கொள்முதல் நிறுவனங்கள் அனைவரும் கூட்டாக முடிவு எடுத்து குறைந்த விலை நிர்ணயம் செய்த காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். ஆகவே 2-ம் மகசூலையாவது தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    முதலமைச்சர் டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×