search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை- இங்கிலாந்து"

    • ஹாரி ப்ரூக் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜேமி ஸ்மித் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்றுதினம் மான்செஸ்டரில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்களும், மிலன் ரத்னாயகே 72 ரன்களும் சேர்க்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் ஏதும் இழக்காமல் 22 ரன்கள் எடுத்திருந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் பென் டக்கெட் 18 ரன்னிலும், லாரன்ஸ் 30 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் ஒல்லி போப் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    நட்சத்திர வீரர் ஜோ ரூட் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அதபின் வந்த விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தும அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 61 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னுடனும், அட்கின்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.

    ×