search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச விசா"

    • இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம்.
    • விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்று கொள்ளலாம். 

    அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. நமது அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உட்பட 35 நாடுகளை சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.

    இதேபோல் நமது அண்டை நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. 

    தென்கொரியா, நார்வே, பின்லாந்து , ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் சீனாவிற்குள் வணிகம், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை பார்ப்பதற்காக விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விசா இல்லாமல் பயணிப்பதால் 15 நாட்கள் மட்டுமே சீனாவிற்குள் இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த புதிய நடைமுறை 2025 டிசம்பர் 31 வரை தான் அமலில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதில் இருந்து மீண்டு வர இலங்கை அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

    அந்த வகையில் நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா உள்பட 35 நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

    சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ இதுப்பற்றி கூறுகையில், "இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்" என்றார்.

    மேலும் அவர், "பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இலங்கைக்கு ஆண்டுதோறும் 50 லட்சம் சுற்றுலா பயணிகளின் இலக்கை அடைவதுமே இந்த முடிவின் நோக்கம்" எனவும் கூறினார்.

    ×