என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெண்டன் மெக்கல்லம்"

    • இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார்.
    • ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்தது. 3 போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் உள்ளார். அவர் 2022 முதல் இங்கிலாந்து பயிற்சியாளராக உள்ளார். 2024-ல் அனைத்து வடிவங்களுக்கும் பொறுப்பேற்றார். 2027 வரை ஒப்பந்தம் உள்ளது, ஆனால் அவரது எதிர்காலம் குறித்து உறுதியற்ற நிலை நிலவுகிறது.

    அதற்கு முக்கிய காரணமாக சமீபத்திய ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்தது விமர்சனத்துக்குள்ளானது.

    மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் யோசனை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிரெண்டன் மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும்.


    ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்த ஒருவரை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலம், பலவீனம், திட்டங்கள், மனம் ஆகியவற்றைத் அறிந்து, அதிலிருந்து எப்படி உங்களால் சாதகத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

    அந்த வகையில் ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்த முடியும்? எனத் தெரிந்தவர் அவர்தான் என பனேசர் கூறினார். 

    • 2014 ஆம் ஆண்டு பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சிக்சர்கள் அடித்திருந்தார்.
    • ஜெய்ஸ்வால் இந்தாண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இன்றைய 2-வது ஆட்டத்தில் 104 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆன ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 193 பந்துகளில் 90 ரன்கள் அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

    இந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற பிரெண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்தார்.

    2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை 34 சிக்ஸர்கள் அடித்து ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:-

    மெக்கல்லம் -33 சிக்சர்கள் (2014)

    பென் ஸ்டோக்ஸ் - 26 சிக்சர்கள் (2022)

    கில்கிறிஸ்ட் -22 சிக்சர்கள் (2005)

    வீரேந்தர் சேவாக்- 22 சிக்சர்கள் (2008)

    ×