search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Somanatha Swamy Temple"

    • இன்று 9-வது திருநாளை முன்னிட்டு காலையில் சுவாமி பிக்ஷாடனராக எழுந்தருளி சப்பரபவனி நடந்தது.
    • நிறைவு நாளான நாளை இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடை பெறுகிறது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோம சுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவி லில் ஆனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.

    8-வது திருநாளான நேற்று காலையில் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து நடராஜர் மூர்த்தி வெஞ்சப்பரத்தில் வெண்பட்டு உடுத்தி வெண்மலர்ச்சூடி வெள்ளை சாத்தி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மண்டகப்படிதாரரான தொழிலதிபர் எஸ்.ஆர்.எஸ். சுரேஷ்குமார் சார்பில் சஜன் கலந்து கொண்டார்.

    இரவில் ஆனந்த நடராஜர் சிவகாமி அம்பாளுடன் பத்ர பூஞ்சப்பரத்தில் பச்சை பட்டாடை உடுத்தி வில்வம், மரிக்கொழுந்து மற்றும் பச்சை இலை மாலை அணிந்து பச்சை சாத்தி திருவீதி உலா நடைபெற்றது.

    பின்னர் வெட்டும் குதிரை வாகனத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடந்தது. இந்நிகழ்ச்சியின் உபயதாரர் டி.சி.டபுள்யூ நிறுவனத்தின் அதிகாரி ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் குழுவினர் செய்திருந்தனர். விழாவில், கோவில் மணியம் சுப்பையா, டி.சி.டபிள்யூ உதவி தலைவர் சுரேஷ், அரிகிருஷ்ணன், தெரிசை அய்யப்பன், நடராஜன், சங்கரலிங்கம், கற்பகவிநாயகம், தங்கமணி, கீழவீடு கார்த்திகேயன், அமிர்தராஜ், ராஜாமணி, பேராசிரியர்கள் அசோக் குமார், கதிரேசன், இளைய பெருமாள், தொழிலதிபர்கள் பூபால் ராஜன், தியாகராஜன், தவமணி, செல்வ பெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 9-வது திருநாளை முன்னிட்டு காலையில் சுவாமி பிக்ஷாடனராக எழுந்தருளி சப்பரபவனி நடந்தது. இரவில் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமி அம்பாள் பூஞ்சப்ப ரபவனியும் சிறப்பு தீபா ராதனையும் நடக்கின்றன. நிறைவு நாளான நாளை இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடை பெறுகிறது.

    • அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது.
    • இன்று மாலை திருநாவுக்கரசர் சுவாமி களின் உழவாரப்பணி உலா நடக்கிறது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடிப்பட்ட ஊர்வலம்

    முன்னதாக நேற்று காலையில் கணபதி ஹோமம் மாலையில் நால்வர் சுவாமிகளின் புறப் பாடு, தேவார திருமுறை பாரா யணம், காப்பு கட்டு தல் ஆகியவை நடந்தன. இன்று அதிகாலையில் கும்ப பூஜையை தொடர்ந்து கொடிப்பட்ட ஊர்வலம் நடந்தது. பின்னர் கொடியேற்றம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. பூஜை வைப வங்களை அய்யப்ப பட்டர் குழுவினர் செய்திருந்தனர்.

    கோவில் மணியம் சுப்பையா, தொழிலதிபர்கள் தவமணி, பூபால் ராஜன், செல்வ பெருமாள், நடராஜன், பேராசிரியர் அசோக்குமார், தெரிசை அய்யப்பன், அமிர்தராஜ், தங்கமணி, கற்பக விநாயகம், இளையபெருமாள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமி வீதிஉலா

    இன்று மாலை திருநாவு க்கரசர் சுவாமி களின் உழவார ப்பணி உலா நடக்கி றது. தொடர்ந்து யாகசா லை பூஜை நடக்கிறது. பின்னர் இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவரு டன் ரிஷப வாக னத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினசரி காலையும், மாலையும் சப்பரபவனி, பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிறைவாக 25-ந் தேதி 10-வது நாள் திருவிழா அன்று மாலையில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது.

    • ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் நாளை இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடைபெற இருக்கிறது.
    • பூஜை ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் கோவிலில் சிவராத்திரி தினமான நாளை( சனிக்கிழமை )இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி முதலாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி தொடர்ந்து இரண்டாம் காலம், மூன்றாம் காலம் மற்றும் நான்காம் பூஜைகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை முதலாம் கால பூஜை மண்டகப்படிதாரர் ராஜாராம், இரண்டாம் கால பூஜை மண்டகப்படிதாரர் அண்ணாமலை சுப்ரமணியன், மூன்றாம் கால பூஜை மண்டகப்படிதாரர் பழக்கடை கணேசன், நான்காம் கால பூஜை மண்டகப்படிதாரர் அய்யம்பெருமாள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ஆறுமுகநேரி ஸ்ரீ சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.
    • சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோம சுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் உலக மக்கள் நலனுக்காக சிறப்பு வழிபாடு 2 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மறுநாள் காலையில் யாக பூஜையும் இதனைத் தொடர்ந்து அன்னா பிஷேகமும் நடந்தன. மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் பின்னர் அன்னதானமும் நடந்தன.

    இரவில் 306 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன் விளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். உழவார பணிகளில் ஈடுபட்ட பக்தர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பூஜை ஏற்பாடுகளை ஆலய பூசாரி அய்யப்ப பட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், தெரிசை அய்யப்பன், தங்கமணி, போகன், மண்டக படிதாரர்கள் கனகம்மாள், தொழிலதிபர் சிவக்குமார், திருச்செந்தூர் தபால் துறை ஊழியர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×