என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Special Editors"
- "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-2024-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- தினத்தந்தி நாளிதழின் தலையங்கத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-க்குள், ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்திட உறுதி பூண்டுள்ளார். அதற்காக, பல்வேறு திட்டங்களைப் புதிதுபுதிதாக உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" எனும் புதிய திட்டத்தை 2023-2024-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திட்டம் பட்டியல் இன, பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டமாகும். இதில் தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாகவும், 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பாக, தினத்தந்தி நாளிதழில் இன்றைய தலையங்கத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" - ஆதிதிராவிடர் – பழங்குடியின மக்களில் இருந்து தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் #DravidianModel-இன் புரட்சித் திட்டம்!
இதுவரையில்,
- பயனாளிகள் - 1988
- கடன் - ரூ.453 கோடி
- மானியம் - ரூ.230 கோடி
தினத்தந்தியின் இந்தத் தலையங்கம் நமது பணிகளுக்கான ஊக்கம் என்றாலும்; இதன் நோக்கம் தேவையுள்ள மக்களுக்கு முழுதாகச் சென்றடைய, விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயரவேண்டும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" - ஆதிதிராவிடர் – பழங்குடியின மக்களில் இருந்து தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் #DravidianModel-இன் புரட்சித் திட்டம்!இதுவரையில்,✅ பயனாளிகள் - 1988✅ கடன் - ரூ.453 கோடி✅ மானியம் - ரூ.230 கோடி@dinathanthi-யின் இந்தத் தலையங்கம்… pic.twitter.com/zmlTjp4uXF
— M.K.Stalin (@mkstalin) November 7, 2024
- தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் வட்டார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாழப்பாடி ஓவிய ஆசிரியர் ஓ.ப.முருகன் தலைமை வகித்தார். பேளூர் சுரேஷ் வரவேற்றார். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் செல்வம், நந்தகுமார், கிரேசி குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ராமகேசவன், பொருளாளர் காதர் மொய்தீன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை போராட்டம் குறித்து ஆலோசனை வழங்கினர்.
பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக சிறப்பாசிரியர் சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.