search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRHvKKR"

    • டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அந்த அணி 171 ரன்களை சேர்த்தது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஜேசன் ராய் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 31 பந்தில் 42 ரன்னில் வெளியேறினார். ஆண்ட்ரூ ரசல் 24 ரன், சுனில் நரைன் 1 ரன், ஷர்துல் தாக்குர் 8 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி 46 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvKKR
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் இதே ஓவரின் 5-வது பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ரன் ஏற்றத்தில் தடங்கல் ஏற்பட்டது. சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸ் விளாச சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19 ஓவர் முடிவில் 150 ரன்னைத் தொட்டது. கடைச ஓவரை பிரசித் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை புவனேஸ்வர் குமார் பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

    5-வது பந்தில் 2 ரன்னும், கடைசி பந்தில் சிக்ஸரும் விளாச கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. ரஷித் கான் 10 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #SRHvKKR
    ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். மணிஷ் பாண்டே, கோஸ்வாமி, சந்தீப் ஷர்மா நீக்கப்பட்டு தீபக் ஹூடா, சகா, கலீல் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சியர்லெஸ் நீக்கப்பட்டு ஷிவம் மவி சேர்க்கப்பட்டுள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தவான், 2. கேன் வில்லியம்சன், 3. ஷாகிப் அல் ஹசன், 4. யூசுப் பதான், 5. தீபக் ஹூடா, 6. சகா, 7. பிராத்வைட், 8. புவனேஸ்வர் குமார், 9. ரஷித் கான், 10. சித்தார்த் கவுல், 11. கலீல் அஹமது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சுனில் நரைன், 2. கிறிஸ் லின், 3. ராபின் உத்தப்பா, 4. நிதிஷ் ராணா, 5. தினேஷ் கார்த்திக், 6. ஷுப்மான் கில், 7. அந்த்ரே ரஸல், 8. பியூஸ் சாவ்லா, 9. குல்தீப் யாதவ், 10. பிரசித் கிருஷ்ணா, 11. ஷிவம் மவி.
    எங்களுடைய டெத் ஓவர் பவுலிங்குதான் டர்னிங் பாயின்ட் ஆக அமைந்தது என கொல்கத்தா இளம் வீரர் ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார். #IPL2018 #KKR
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 54-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

    ஒரு கட்டத்தில் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோர் 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களாக இருந்தது. ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 12.5 ஓவரில் 17 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை கட்டுப்படுத்தினார்கள்.



    கடைசி 7 ஓவரில் (42 பந்தில்) 44 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். குறிப்பாக இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா 4 ஓவரில் 30 ரன்கள் மட்டு விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியதே வெற்றிக்கு காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஆன ஷுப்மான கில் கூறியுள்ளார். இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சாளர்கள் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியதே டர்னிங் பாயின்ட்டாக அமைந்தது. பிரதிஷ் அருமையாக பந்து வீசினார். டெத் ஓவரில் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள்’’ என்றார்.
    ×