search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka blast"

    பயங்கரவாத தாக்குதல் குறித்து அதிபருக்கு முன்கூட்டியே தெரியும் என்று இலங்கை உளவுத்துறை தலைவர் கூறியதை சிறிசேனா மறுத்துள்ளார்.
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தினர். அதில், 253 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதல் குறித்த சதித்திட்டத்தை இலங்கை அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் முன்கூட்டியே தெரிவித்தன. இருப்பினும், இலங்கை அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த உளவுத்துறை தகவல் குறித்து தனக்கு முன்கூட்டியே தெரியாது என்று அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் மற்றும் தாக்குதலை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றி விசாரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை சிறிசேனா கட்சியும், ராஜபக்சே கட்சியும் புறக்கணித்து வருகின்றன.

    இந்த குழு முன்பு, இலங்கை உளவுத்துறை தலைவர் சிசிறா மென்டிஸ் நேற்று முன்தினம் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி, உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அதில் அதிபர் சிறிசேனாவும் பங்கேற்றார். பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவு தகவல் பற்றி அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம்.



    அந்த தகவலை கூட்டத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், அந்த தகவல் குறித்து போலீஸ் ஐ.ஜி.க்கு கடிதம் எழுதினேன். ‘முக்கியமான தகவல்‘ என்பதை குறிப்பதற்கான வாசகத்தையும் அதில் எழுதினேன்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    ஆனால், உளவுத்துறை தலைவர் சிசிறா மென்டிஸ் கூறியதை அதிபர் சிறிசேனா நேற்று நிராகரித்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் 2 மணி நேரமாக நடந்தது. ஆனால், பயங்கரவாத தாக்குதல் குறித்த உளவு தகவலை எந்த அதிகாரியும் தெரிவிக்கவில்லை. எனவே, தாக்குதல் குறித்து எனக்கு முன்கூட்டியே தெரியாது” என்று கூறியுள்ளார்.
    இலங்கையில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வென்று அதிபராகி பயங்கரவாதத்தை ஒடுக்குவேன் என்று ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். #GotabayaRajapaksa #srilankablasts

    கொழும்பு:

    இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர் ராஜபக்சேவின் அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த உள் நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    உள் நாட்டு போர் முடிந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் 253 பேர் பலியாகினர்.

    இது குறித்து கோத்தபய ராஜபக்சே நிருபர்களிடம் கூறும்போது, ‘இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். உள் நாட்டு போரின் போது உளவுத்துறையும், வெளிப்புற கண்காணிப்பு அமைப்பும் ஒன்றாக இருந்தது. அதை தற்போதைய அரசு பிரித்து தனி தனியாக மாற்றிவிட்டது.

    அதனால் தாக்குதலை தடுக்க முடியாமல் ஒரு பீதியான குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. வருகிற டிசம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

    அதில் நான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி. அதில் வெற்றி பெற்று உளவுத்துறை மற்றும் வெளிப்புற கண்காணிப்பை மீண்டும் உருவாக்கி பயங்கரவாதத்தை ஒடுக்குவேன்” என்றார். #GotabayaRajapaksa #srilankablasts

    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது செய்யப்பட்டார். #srilankablast
    இலங்கை

    கொழும்புவில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே பாதுகாப்பு படையினர் சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்து வருகிறார்கள். சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

    இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடக்கிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கைது செய்யப்படவில்லை என ரிஷாத் மறுப்பும் தெரிவித்துள்ளார். #srilankablast
    இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கோவை வாலிபர் ஆசிக் கூறியுள்ளார். #srilankablasts

    கோவை:

    கோவையில் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக கோவையை சேர்ந்த ஆசிக் உள்பட 7 பேரை கோவை வெரைட்டிஹால் போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. கைதானவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் கைதான 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், கோவையில் கைதானவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


    கோவையில் கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன், வீடியோக்களின் அடிப்படையில் இலங்கையில் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்திருந்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறினர். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில் தற்போது ஜாமீனில் இருக்கும் கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த ஆசிக் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குழுவுக்கும் , எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்கவே என்.ஐ.ஏ அதிகாரிகள் முயல்கின்றனர். எங்கள் மீது சொல்லப்பட்ட குற்றச் சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ளோம் .

    கைது செய்யப்பட்ட போது எங்களை அடித்து சித்ரவதை செய்து வாக்கு மூலம் வாங்கினார்கள். என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்த கோபத்தில் எங்களுக்கும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ தகவல் பரப்புகிறது.

    கைதாகி இருந்த போது என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 முறை காவலில் எடுத்து என்னிடம் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் நல்ல பெயர் எடுக்க எங்கள் மீது பழியை போட பார்க்கின்றனர்.

    ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என்னை கைது செய்த பிறகு தான் அந்த அமைப்பை பற்றி தெரிந்து கொண்டேன். இலங்கையை சேர்ந்த ஹசீப் தொடர்பான வீடியோக்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    இஸ்லாமியர்களை பயங்கரவாதியாக சித்தரிக்க வேண்டும் என்பது மட்டுமே என்.ஐ.ஏ வின் நோக்கமாக இருக்கிறது. என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக என்னிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. விசாரணை மேற்கொண்டால் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #srilankablasts

    இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பேரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. #srilankabalasts
    இலங்கை:

    இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

    இதில் 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இந்த சம்பவத்தை நிகழ்த்திய 9 பேரின் புகைப்படங்களை காவல்துறை இன்று வெளியிட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் பெற்றுள்ளன. #srilankabalasts 
    இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நாமக்கல்லில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    நாமக்கல்:

    ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பில் 290-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயம் முன்பு கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாதிரியார் ஜான் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். இதில் உதவி பாதிரியார் அருள்சுந்தர் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 
    ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் வங்காளதேச பிரதமரின் பேரன் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. #SriLankablasts #Colomboblast
    டாக்கா:

    வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

    இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி (வயது 8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். இவர்கள் அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர்.



    இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ஷேக் சோனியா குடும்பத்தினர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலிலும் குண்டு வெடித்தது.

    அப்போது ஓட்டலின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் ஜயான் சவுத்ரி குண்டுவெடிப்பில் சிக்கினர். இதில், மஷியுல் ஹக்யு சவுத்ரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஜயான் சவுத்ரி மாயமானதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் ஜயான் சவுத்ரி பலியாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஷேக் செலிம் குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் ஜயான் சவுத்ரியின் உடல் நேற்று வங்காளதேசம் கொண்டு செல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  #SriLankablasts #Colomboblast
    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நிகழந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 290 பேரில் 8 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. #8Indianskilled #Easterblasts #SriLankarblasts
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

    இந்தியாவை சேர்ந்த லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று தெரிவித்திருந்தார். 

    இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 4 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் வேமுராய் துளசிராம், எஸ்.ஆர். நாகராஜ், கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்தது.

    இந்நிலையில், இதுவரை 8 இந்தியர்கள் குண்டுவெடிப்பில் பலியானதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் இன்று மாலை தெரிவித்துள்ளது. 

    ஹெச்.சிவக்குமார் என்ற இந்தியரும் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

    இதற்கிடையில், கேரள மாநிலத்தை சேர்ந்த ரசினா என்பவரும் இந்த குண்டுவெடிப்பிப் பலியானதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த தகவல் இந்திய அரசின் சார்பில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. #8Indianskilled  #Easterblasts #SriLankarblasts
    இலங்கையில் நேற்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்றிரவு முதல் ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்படுகிறது. #SriLankacurfew #SriLankablasts
    கொழும்பு:

    இலங்கையில் 290 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். 

    அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா தலைமையில் இன்று முற்பகல் தேசிய பாதுகாப்பு சபைகூடியபோது நேற்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

    நேற்று பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்றிரவு 8 மணியில் இருந்து நாளை (23-ம் தேதி) அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. #SriLankacurfew #SriLankablasts
    இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார். #SriLankablast #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கையைச் சேர்ந்த ஒரு அமைப்பு தற்கொலை தாக்குதல் நடந்த மிகப்பெரிய அளவில் தயாராகி வருவதாக கடந்த 4-ந் தேதியே இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்தது.

    இந்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில், “கொழும்பில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்ற குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.

    இந்தியாவின் இந்த எச்சரிக்கையை இலங்கை அரசியல் தலைவர்களும், ராணுவ தளபதிகளும் சற்று அலட்சியமாக கருதினார்கள். என்றாலும் இலங்கை போலீஸ் தலைவர், பூஜீத் ஜெயசுந்தரா அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் 10 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பினார்.

    அதில் அவர், “கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கவும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் உள்ளூர் போலீசார் அதன் பிறகும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை.



    போலீசாரின் அலட்சியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டப்படி தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டனர். 

    இந்த நிலையில் “கவனக்குறைவாக இருந்து விட்டோம்” என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    கொழும்பில் பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட இருப்பதாக இந்தியா கூறிய பிறகும் நாங்கள் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டோம். உண்மையில் நாங்கள் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டோம்.

    சர்வதேச உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் இருந்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்து இருக்கலாம்”

    இவ்வாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

    2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை இந்தியா உதவியுடன் போரில் தோற்கடித்த இலங்கை அதன்பிறகு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக கெடுபிடிகள் செய்யப்பட்டன.

    கடந்த 2 ஆண்டுகளாக இலங்கையில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறைக்கப்பட்டன. இந்த பாதுகாப்பு குறைபாடு இலங்கைக்கு நேற்று மிகப் பெரிய இழப்பை கொடுத்து விட்டது. #SriLankablast #RanilWickremesinghe
     
    ×