என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "star speakers"
- நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.
- தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.
திருப்பதி:
பாராளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மாநிலம் விட்டு மாநிலங்கள் செல்வதற்காக வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
நட்சத்திர பேச்சாளர்கள் ஒரு நாளைக்கு பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்வதால் ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.
இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஹெலிகாப்டர்களுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஹெலிகாப்டர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இது கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
குறிப்பாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகளவில் வாடகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களை பொருத்தவரை தெலுங்கானா மாநிலத்தில் தான் அதிக அளவில் பிரசாரத்திற்கு வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மற்ற தென் மாநிலங்களில் இந்த அளவு ஹெலிகாப்டர்கள் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.
பிரசாரத்தின் கடைசி நாள் வரை ஹெலிகாப்டர்கள் வாடகைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
- தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
- மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,
திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை கமல்ஹாசன் ஈரோடு மற்றும் குமாரபாளையத்திற்கு (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அதில்,"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க" என்று பதிவிட்டுள்ளளார்.
- 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பெயர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
அதில் 29 கட்சிகளை சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்துடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதில் தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 40 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் 33-வதாக நடிகர் கருணாஸ் பெயரும், 35-வது பெயராக நடிகர் கமல்ஹாசன் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசன் பெயருடன் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 40 பேர் உள்ளனர். இதில் நடிகைகள் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், நிர்மலா பெரியசாமி, நடிகர் சிங்கமுத்து பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
த.மா.கா. பட்டியலில் ஜி.கே.வாசன், சுரேஷ், சக்தி வடிவேல், விடியல் சேகர், முனவர் பாஷா, ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்ட 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பாரதிய ஜனதா பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீத்தாராமன், யோகி ஆதித்யாநாத் பெயர்களுடன் தமிழக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், அன்புமணி, தமிழருவி மணியன், எச்.ராஜா, குஷ்பு, சரத்குமார் உள்ளிட்ட 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ், பா.ம.க. கட்சிகள் இதுவரை நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்கவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்