search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "started fasting by"

    • கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
    • ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    கோபி:

    கேரள மாநிலம் சபரி மலையில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விள க்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அந்த நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலை க்கு சென்று ஐயனை தரி சனம் செய்வார்கள்.

    இதை யொட்டி தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ங்களில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் ஐயப்பன் கோவில், கோபி ஐயப்பன் கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமார சாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோ வில் மற்றும் சுற்று வட்டார கோவில்களில் இன்று அதி காலை முதலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று காலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இவர்கள் துளசி மணி அல்லது ருத்ராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் கொண்டதாக வாங்கி அவ ற்றுடன் அய்யப்பன் திருவுரு வப்படத்தை இணைத்து அணிந்து கொண்டனர். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொண்டனர்.

    இதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நல்ல நாளில் மாலை அணிந்து கொள்வார்கள். சன்னிதானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்பாக குறை ந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கு ம்படி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்வர்.

    ஐயப்ப பக்தர்கள் தின மும் இரு வேலைகளில் குளித்து அய்யப்பன் திரு வுருவப்படத்தை வணங்கி தினமும் ஆலய வழிபாடு மற்றும் பஜனைகளில் கலந்து கொண்டு ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    ×