search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing electric motor"

    • மெக்கானிக் அங்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாரை காணவில்லை.
    • விசாரணை நடத்தி மின்மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை அடுத்த சின்னப்பள்ளம் கே.ஆர்.தோட்டத்தில் செந்தில்குமார் ( 52) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் தனது வீட்டு போர்வெலில் தண்ணீர் எடுப்பதற்காக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின்சார மோட்டார் பொருத்தி வைத்துள்ளார். இந்த மின் மோட்டார் கடந்த 13-ந் தேதி பழுது ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து அதனை சரி செய்து மீண்டும் பொருத்தி உள்ளார். அதன் பிறகு செந்தில்குமார் சொந்த வேலையாக சென்னை சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை என செந்தில்குமாரின் மனைவி அவருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

    உடனடியாக செந்தில்குமார் அங்குள்ள ஒரு மெக்கானிக்கை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் மின் மோட்டாரை பழுது பார்க்க அனுப்பியுள்ளார்.

    இதையடுத்து மெக்கானிக் அங்கு சென்று பார்த்தபோது மின் மோட்டாரை காணவில்லை. இதுகுறித்து மெக்கானிக் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்த செந்தில்குமார் மின் மோட்டார் இருக்கும் இடத்தில் சென்று பார்த்தார். அங்கு மோட்டார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இத குறித்து அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மின்மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் மின்மோட்டார் திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் போலீசாரின் விசாரணையில் அதே பகுதி சேர்ந்த ரஞ்சித் குமார் (23), பூனாச்சி அருகே உள்ள முகாசிபுதூர் மனோஜ்( 21) ஆகியோர் மின் மோட்டார் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்கள் 3 பேரும் சேர்ந்து மோட்டார் திருடி அம்மாபேட்டையில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • 2 வாலிபர்கள் பழுதடை ந்ததால் கழற்றி வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் ஒன்றை திருடிக்கொண்டு குடோனில் இருந்து தப்பியோடினர்.
    • இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள கனிராவுத்தர் குளம் பகுதியில் கெமிக்கல் குடோன் ஒன்று செயல்பட்டு வருகின்றது.

    நேற்றிரவு இந்த குடோனிற்குள் நுழைந்த 2 வாலிபர்கள் பழுதடை ந்ததால் கழற்றி வைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் ஒன்றை திருடிக்கொண்டு குடோனில் இருந்து தப்பியோடினர்.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 2 வாலிபர்களையும் துரத்தி சென்று பிடித்து வீரப்பன் சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசார ணையில் பிடிபட்டவர்கள் ஈரோடு சின்னசேமூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரமூர்த்தி (23), வீரப்பன்சத்திரம் கண்ணதாசன் வீதியை சேர்ந்த சதாம்உசேன்(25) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×