search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing goats"

    • வீட்டில் கட்டியிருந்த ஆட்டுகிடாவை கடந்த மார்ச் 25-ந்தேதி காணவில்லை.
    • ஆட்டுகிடாவை அறுத்து இறைச்சியாக விற்பனை செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் மருதுபாண்டியன்(40). இவர் ஆட்டுகிடாவை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டுகிடாவை கடந்த மார்ச் 25-ந்தேதி காணவில்லை. இதுதொடர்பாக இவர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணி வழக்குபதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் ஆய்வு செய்தார். அதன்பேரில் தமிழன், விஜய், ஜெயபிரகாஷ் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தார். மேலும் ஆட்டுகிடாவை அறுத்து இறைச்சியாக விற்பனை செய்த அண்ணா மலையை யும் கைது செய்தார்.

    • மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று கொண்டிருப்பதை கண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
    • இதில் அவர்கள் திருடிய ஆட்டை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கறிக்கடையில் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி சாவடி ப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (44). இவர் தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார்.

    இவர் வீட்டில் ஏராள மான ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். ஆடு, மாடுகளை அதே பகுதியில் தனக்கு சொந்தமான தோட்ட த்திற்கு சென்று தினமும் காலை மேய்க்க விட்டு மாலை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம்.

    இதேபோல் நேற்றும் நந்தகுமார் ஆடு, மாடுகளை தோட்டத்தில் மேய்க்க விட்டிருந்தார். பின்னர் மதியம் நந்தகுமார் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது மேய்ந்து கொண்டிருந்த 2 ஆடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடுகளை திருடி சென்று கொண்டிருப்பதை கண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த 2 பேரையும் நந்தகுமார் மடக்கி பிடித்தார். இது குறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (44), மற்றொருவர் ஊத்துக்குளி காங்கேயம்பாளையம் பகுதியை சேர்ந்த பூபதி (37) என்பதும் அவர்கள் ஆட்டை திருடி சென்றதும் ஒப்புக்கொண்டனர்.

    இதில் அவர்கள் திருடிய ஆட்டை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கறிக்கடையில் விற்றதும் தெரியவந்தது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    ×